காபி குடித்தால் மலட்டுத்தன்மை உண்டாகும்! – ஆய்வில் தகவல்

காபி குடித்தால் மலட்டுத்தன்மை உண்டாகும்! – ஆய்வில் தகவல்

காபிக்கு மயங்கிக் கிடப்பவர்கள் பலர். தாங்கள் ரசித்து ருசிக்கும் ‘நல்ல காபி’ கிடைக்கும் இடமாகத் தேடித் தேடிப் போய் அருந்துவார்கள். அவ்வப்போது காபியை உள்ளுக்குள் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். காபியில் இருக்கும் காஃபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்குக் காரணமாக அமைந்துவிடும். அளவுக்கு அதிகமாகக் காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படலாம்.
cofffee risk
காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விறைப்படையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவுக்கு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.சிலருக்குத் தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்குச் சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான் என்று தெரிவித்திருந்தனர்.

இதனிடையே பெண்களில் பலரும் காபி அடிமைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஓர் எச்சரிக்கை சேதி வெளியாகியுள்ளது.தினமும் நான்கு கப் காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதற்கு சமமானது என்றும், இதனால் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காபியில் உள்ள முக்கிய வேதிப்பொருள், காபீன். கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த இது, உடலுக்குச் சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

குழந்தையின்மைக்குக் காரணமாக டாக்டர்கள் பட்டியலிடும் புகை, மது, அதிக உடல் எடை ஆகியவற்றுடன் ‘காபீனும்’ தற்போது இணைந்துள்ளது.கருவுறுதலில் மட்டுமின்றி, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால், அதன் நச்சுத்தன்மை கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும் என்று எச்சரிக்கை விட்டுள்ளார்கள் டாக்டர்கள்..

error: Content is protected !!