காத்துவாக்குல ரெண்டு காதல் – விமர்சனம்!

காத்துவாக்குல ரெண்டு காதல் – விமர்சனம்!

ரே காலக் கட்டத்தில் இரண்டு பேர் மீது காதல் – இந்த போக்கு உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு நடக்கத்தான் செய்கிறது. ஆம்.. ஒரே நேரத்தில் இரண்டு பேர் மீது காதல் அல்லது ஒரு உறவில் இருக்கும் போது வேறு ஒருவரையும் பிடித்துப்போவது. என சம்பவங்கள் மனித வாழ்வில் சகஜம் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நம் இந்தியா போன்ற நாடுகளில் உறவுகளை புனிதப்படுத்தி போர்த்தி காப்பதால் இந்த உளவியல் சிக்கல்களை வெளியில் சொன்னால் கூட பெயர் கெட்டு விடும் என்ற நிலை உள்ளது. இந்த இரட்டைக் காதல் பிரச்னை குறித்து ஓப்பனாக பேசாததாலும் , தீர்வு கிடைக்காமல் போனதாலும்தான் சிலர் அத்து மீறிய உறவுகள் – அது கள்ளக் காதல் என்று தெரிந்த நிலையிலும் மேற்கொள்கின்றனர். அப்படி எவரும் இன்று வரை அதிகம் அலச முன் வராத இந்த காதல் + காதல் என்ற மன நிலையை வைத்து காமெடியுடன் கூடிய ஒரு நான் வெஜ் விருந்தைப் படைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

கதைப்படி ஹீரோ விஜய் சேதுபதி பிறந்ததிலிருந்து துரதிஷ்டசாலி என்ற நினைத்தபடி வாழும் மனுசன். அதாவது அடைமழை பெய்யும் போது இவர் வெளியே போனால் அந்த மழை கூட நின்றுவிடுமாம். அப்பேர்பட்டவருக்கு திடீரென்று நேருக்கு மாறாக நடக்கிறது. அதாவது பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டி வரும் சூழலில் டிரைவராக வேலை செய்யும் போது நயன்தாராவையும், பவுன்சர் வேலை செய்யும்போது சமந்தாவையும் காதலிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இரட்டைக் குதிரை சவாரி செய்தபடி பயணிக்கும் நாயகனுக்கு ஒரு கட்டத்தில் இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் இந்த காதல் பிரச்சனை எப்படி சமாளிக்கப்பட்டது? என்பதே கா.வா.ரெ.காதல்

கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக லேடி சூப்பர் ஸ்டாரின் காதலன் அந்தஸ்தை அடைந்து உள்ள விக்னேஷ் சிவன் பக்கா ரொமான்ஸ் கலந்த கதைகளை குளோப்ஜாமூன் சாப்பிடுவது போல் கையாண்டு பேர் வாங்கியவர். அந்த வகையில் இப்படத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார். சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி மூன்று பேருக்கும் இடையில் நடக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் சுவாரஸ்யமாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. சமந்தாவை காதலிக்க தொடங்கும் காட்சியாகட்டும் நயன்தாராவை லவ்வும் சீன் ஆகட்டும் – ஒவ்வொன்றும் நம்பும்படி அழகாய், ரசிக்கும்படி வைத்துள்ளார். சமந்தாவும், நயன்தாராவும் அழகிலும் சரி நடிப்பிலும் சரி போட்டி போட்டுக் கொண்டு சகல தரப்பினரையும் கவர்கிறார்கள். விஜய் சேதுபதியுடனான காட்சிகளை விட இவ்விரு அழகிகளால்தான் முழு படமே வழுக்கிக் கொண்டே செல்கிறது.

ஆனாலும் ஹீரோ விஜய் சேதுபதி, ராம்போ ரோலில் ரசிகர்களை பெரிதும் கவர்கிறார். இது லவ் சப்ஜெக்ட் என்பதை உணர்ந்து சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகளில் கூட கொஞ்சம் கூட ரொமான்ஸ் எக்ஸ்பிரஸன்ஸ் இல்லை என்றாலும் கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசை என்பதை சொல்லாமல் பேசும் வசனங்கள், காபியை டீயையும் சாசரில் இணைத்து ஊற்றி குடிக்கும் காட்சி, ஒரு கட்டத்தில் ‘ஐ லவ் யூ டூ.. – ஐ லவ் யூ டூங்க’ என்று சொல்லும் சீன்களில் எல்லாம் ரசிகனும் ‘ஐ லவ் யூ டூ’ என்று வாய் விட்டுச் சொல்ல வைக்குமளவு ஏகப்பட்ட ஹோம் ஒர்க் செய்து ஷூட்டிங்கில் ஐக்கியமாகி இருக்கிறார் என்பது அப்ப்பட்டமாக தெரிகிறது.

ரியாலிட்டி டாக்-ஷோ நிகழ்ச்சி காம்பியராக வரும் இளைய திலகம் பிரபு கொஞ்சம் போஷாக்கான சின்னத் தம்பியாகவே வந்து கவர்கிறார். இவர்களுடன் கலா மாஸ்டர், உசேன், மாறன், கிங்ஸ்லி, பிரபு, சித்ரா லட்சுமணன்,கூட்டணியும் காத்து வாக்கில் பல காமெடிகளை கணக்கு வழக்கு இல்லாமல் அவிழ்த்து விடுகிறார்கள். இம்புட்டு பேர்களை ‘கராத்தே’ உசேன் தனிக் கவனம் பெறுகிறார்

படத்திற்கு பெரிய பலம் அனிருத்தின் இசை. சில்வர் ஜூப்ளி படமான இதில் பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார். பாடல்கள் எல்லாமே படம் முடிந்தவுடம் மறந்து போனாலும் ஸ்ரீதரின் ஒளிப்பதிவோடு பார்க்கும்போது கண்களுக்கு விருந்து படைத்ததென்னவோ நிஜம்.

அந்த பக்கமோ அல்லது இந்த பக்கமோ கொஞ்சம் பிசகினாலும் தப்பாகி கள்ளக் காதலாகி போக வாய்ப்புள்ள ஒரு ட்ரை ஆங்கில் லவ் ஸ்டோரியை கேஷூவலாக ஹேண்டில் செய்து சக்சஸ் ஃபார்முலா கண்டறிந்து விட்டார் டைரக்டர் விக்னேஷ் சிவன். ட்ரைலர் பார்த்து பயந்தது போல் படத்தில் கொஞ்சம் ஆபாசமோ, பெரிய ட்விஸ்டோ, பரபரப்பான பஞ்ச் வசனமோ, அதிரவைக்கும் கூஸ்பம்ப் காட்சிகளோ இல்லாமல் இருந்தாலும் ஜஸ்ட் லவ்., லவ் மற்றும் லவ் சீன்களை மட்டுமே கொண்டு கலகலப்பாக காண வந்த ரசிகர்களை கரை சேர்த்துள்ளார்.

மொத்தத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் -கலக்கல்

மார்க் 3.25/5

error: Content is protected !!