நக்சல்களை வேட்டையாடும் பணியில் பெண் கமாண்டோ படை!

நக்சல்களை வேட்டையாடும் பணியில் பெண் கமாண்டோ படை!

நாட்டிலேயே முதல் முறையாக காடுகளில் ஒளிந்து வாழும் நக்சலைட்டுகளை வேட்டையாடும் பெண் கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதன் மூலம் பெண் கமாண்டோக்களை தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் உலகின் சில நாடுகளில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
women commondo
நக்சலைட்டுகளின் பாதிப்பு அதிகமுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்ட்டார் மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதிகளில் இந்த பெண் கமாண்டோக்கள் தற்போது நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெறும், நக்சலைட்டுகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதோடு மட்டுமில்லாமல், நக்சலைட்டுகளின் அட்டகாசம் மிகுந்த பகுதிகளில் வசிக்கும் பெண்களுடன் கலந்துப் பழகி, பதுங்கியிருக்கும் நக்சல்களைப் பற்றிய தகவல்களையும் பெண் கமாண்டோக்களால் தெரிந்துக் கொள்ள முடியும் என்பதால் இந்த பெண் கமாண்டோக்களின் பணி முக்கியத்துவம் பெறுகின்றது என்று நக்சல் ஒழிப்பு வேட்டை சிறப்புப் படை போலீசார் கருதுகின்றனர்.

ஒவ்வொரு குழுவிலும் 35 கமாண்டோக்கள் என சுமார் 70 பெண் கமாண்டோக்களை கொண்ட சிறப்பு படையினர் சத்தீஸ்கரிலும், மேலும் பல குழுவினர் நக்சல்களின் பேராதிக்கம் மிகுந்த ஜார்க்கண்ட் மாநில வனப்பகுதியிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!