“கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை!’ – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்

“கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை!’ – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்

:பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான 6 மாத சிறைத்தண்டனை போதாது என்றும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும சுப்ரீம உத்தரவிட்டது.
dec - milk
உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் கலப்பட பால் குறித்து உச்சநீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2011-ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் கலப்பட பால் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது குறித்தும் அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது.

மேலும் அம்மனுவில்,” உ.பி., ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் இந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் அருந்துவது “சிந்தெடிக்’ பால் என்கிறார்கள் – அதாவது செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா?

* காஸ்டிக் சோடா.
* தண்ணீர்.
* ரீபைன்ட் ஆயில்.
* உப்பு.
* சர்க்கரை.
* யூரியா.

இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாது!

இந்த ‘நவீன பாலை சோதனை செய்யும் நிமித்தம், ராஜஸ்தான் மாநிலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டு இருந்த அதிகாரி அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு, “டிடர்ஜென்ட்’ சோப் பவுடருக்கு ஏக, “டிமாண்ட்’ இருப்பதைக் கண்டு இருக்கிறார். இந்த கிராக்கிக்கு என்ன காரணம் என்பதை ஆராயும் போது தான் உண்மை புலப்பட்டுள்ளது.

இந்த சோப்புப் பொடியில் தண்ணீர் கலந்தால், அதில் இருந்து வரும் வாசனை, பால் வாசனை போலவே இருந்ததாம். அதனால் இந்த சோப்புத் தண்ணீரை, பாலுடன் கலந்து விற்பனை செய்து விடுகின்றனராம்! ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனை மேற் கொண்ட, 200 கிராமங்களில், 41 கிராமங்களில் இது போன்ற கலப்படம் நடப்பதை அதிகாரி கண்டு பிடித்துள்ளார்!

பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்!

இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, “ஹோமோஜினைஸ்’ என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, “குளோபுயூல்ஸ்’ – சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!

இந்த தகவல்கள் அடங்கிய மனுவை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்த போதுதான்,”பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர்க: தீர்ப்பில்,”குழந்தைகள் உட்பட பலரும் அருந்தும் பாலில் கலப்படம் செய்வதை சகிக்க முடியாது. அதிலும், பிளாஸ்டிக் போன்ற ரசாயன கலவை சேர்ப்பது, நுரை வருவதற்காக சோப்பு டிடெர்ஜன்ட் பவுடரை கலப்பது போன்றவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட துறையினர் முழு கண்காணிப்பை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது.

உணவுப்பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு சட்டத்தின் படி, பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆறு மாதம் வரை தான் தண்டனை தர முடியும். இது போதாது. மனித சமுதாயத்தை பாதிக்கும் பால் கலப்படக்காரர்களுக்கு இந்த தண்டனை போதாது. அதனால் சட்டத்தில் உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்படம் செய்த பாலை விற்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை தரும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்

error: Content is protected !!