“கருப்பு கொடி கைலாசங்களும் – ஜாபர்கான்பேட்டைக்கு அடியில் ஜக்கம்மாவும்”

“கருப்பு கொடி கைலாசங்களும் – ஜாபர்கான்பேட்டைக்கு அடியில் ஜக்கம்மாவும்”

இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – “கருப்பு கொடி கைலாசங்களும் – ஜாபர்கான்பேட்டைக்கு அடியில் ஜக்கம்மாவும்” என்ற இரட்டை தலைப்பு கட்டுரை….சமீபத்திய ராஜபக்க்ஷே திருப்பதி விஜயத்தில் ஏதொ தனக்கு முடிந்த வரை அவங்க அவங்க இடத்தில் இருந்தே கருப்பு கொடி காட்டி போராடிய 2014 சுதந்ததிர வீரர்களும், தனக்கு ஒரு மைலேஜ் கிடைக்கவே வேண்டும் என்ற கட்டாயத்தில் வண்டு முருகனும், வாக்கிங் வைக்கோவும் செய்தது எத்தனை பேருக்கு மனதில் நிறைவு தந்தது.
ravi dec 17
கீழ் நீதி மன்றம், உயர் நீதி மன்றம் உச்ச நீதீ மன்றம் வரை வழக்காடும் வன்டு முருகன்கள் நினைத்திருந்தால் இதை சட்ட பூர்வமாய் அவர் வருகையை தடுத்திருக்க முடியும் இல்லையேல் சாமர்த்தியமாக சானக்கியதனத்தை சுப்ரமணி சாமி போன்றவர்களை போல மத்திய அரசின் மூலம் செயல்பட்டு தடுத்திருக்க ஒரு வாய்ப்புண்டு அதை விட்டு விட்டு கருப்பு கொடி ஒரு பெத்த காமெடி தான். இதில் இங்குள்ள யாருக்கு ஒரு சிகைக்கும் லாப நட்டம் இல்லை என்பதை விட ராஜபக்க்ஷே சிறப்பு மைலேஜ் பெற்று கொண்டார் என்பது தான் உண்மை.

அவர் வருகைக்கு முன் 37 மீனவர்கள் இலங்கை சிறைப்பிடிக்கிறது – இவர் ஏடுகொன்டலவாடாவை சந்தித்து சென்ற மறு தினம் அவர்கள் விடுவிக்க படுகின்றனர் – இலங்கையில் எல்லா தரப்பினர்க்கும் ஒரு செய்தி செல்கிறது – இவர் இந்த தேர்தலில் வராவிட்டால் திரும்பவும் புலிகள் வரவாய்ப்புண்டு – பாருங்கள் இன்னமும் எத்தனை ஆதரவாளர்கள் இந்தியாவில் இவருக்கு கருப்பு காட்ட்டி என உச்சி முகர்ந்து ராஜபக்க்ஷேவின் சற்றே சரிந்த செல்வாக்கையும் இங்கே உள்ளவர்களின் கருப்பு கொடி டிராமா ஸ்பான்ஸர் செய்தது தான் உண்மை.

இதில் புதுசாய் டிவி / பேப்பர் / விமானம் என்று இலங்கையுடன் இரவு பகல் பாரா வர்த்தகம் செய்யும் டிவி நிருபர்கள் தாக்கபட்டனர் என்ற அழுகுனி செய்திக்கு அவங்க சேனல்ல இவர்களோட கன்டனம் என்ற காமெடி வேறு – முடிஞ்சா அந்த டிவி முதலாளிகளுக்கும் கருப்பு கொடி வேண்டாம் ஒரு கருப்பு ஸ்டிக்கர் பொட்டாவது காட்டிருக்கலாம் – முன்ன மாதிரி இல்ல இப்ப சித்தூர் – ஆந்திரா இரண்டான பிறகு அங்கு ஆட்சியும் / போலீஸும் / அட்மினிஸ்ட்ரேஷனும் நெம்பவே மாறி போச்சு – அதானால் பிச்சு பிச்சு………………..

தினமும் காவி எம்பிக்களின் ஜலபுல ஜங் பேச்சுக்களை சமாளிக்கவே பிரதமருக்கும் முக்கிய பிஜேப்பிக்கும் நேரம் சரியிருக்கு இதுல தாஜ்மகல் கீழே ஹிந்து கோயில் சர்ச்சை – ஒரு உண்மையை எல்லா இனத்தினரும் தெரிஞ்சுக்குங்க இந்தியாவி பெரும்பாலான பகுதி ஹிந்துக்களின் சாம்ராஜ்யம் தான் – ஹிந்து மதத்தை தவிர அத்தனை மதமும் – ஃபாரின் மதம் தான் – பட் இம்போர்ட்டட் இன் இந்தியா – ரஜபுத்களை சாய்ச்சி 1500 வாக்கில் வந்த முகாலய சாம்ராஜ்யமாகட்டும் 300 வருஷமா ஆண்டு ஊரை விட்டு 1800 களில் பர்மா வழியா தூரத்தின பிரிட்டிஷ் காலத்திலே இஸ்லாமிய சமுதாயம் நன்கு ஓங்கி இந்தியாவி இஸ்லாம் ஒரு அங்கிகரிக்கபட்ட மதமாகவே உருவெடுத்தது. அப்படி இருக்கும் ஒரு காலகட்டாயத்தில் தாஜ் மகல் என்ன பாப்ரி மஸ்ஜித்துக்கு கீழே கூட ராமர் இருந்திருக்கலாம்

ஆனா பாருங்க சில பல வருஷமா வாடகைக்கு இருந்த வீடே அந்த வாடகைக்கு இருந்தவருக்கு சொந்தமாகும் சட்டம் இந்தியாவில் இருக்கும் போது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருக்கும் இவர்களையோ இவர்களின் வழிப்பாட்டு தலங்களையோ கொய்வது – ஆஃப்கான் நாட்டி சில் ஆண்டுக்கு முன் பாமியன் புத்த சிலைகளை கொய்ததற்க்கு சமம் – வாயில சிவலிங்கத்தை வரவைக்கும் இந்த டுபாக்கூர் சாமிகளின் கூட்டத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஓங்கி நிற்க்கும் ஒரு மசூதியின் மூலையில் ஒரு சுயம்புவை எடுப்பது என்பது என்பது ஒரு பெரிய மேட்டரே இல்லை, ஆனால் அதை இடிப்பது ஒரு பெரிய பாவ செயலாகும். அதனால் இதில் பொறுமை காட்டி புத்தி புகுத்த வேண்டியது மாற்று மதத்தினரே.

இத்தகைய மதவெறி கொண்ட மனிதர்கள் எல்லா மதத்திலும் இருக்க அதில் சிலர் ஹிந்து மதத்திலும் ஆட்சியிலும் இருப்பது தவிர்க்க முடியாத விடயம் தான். அதனால் எதிர் மறை பிரச்சினையாக இதை கையான்டால் பாப்ரி மஸ்ஜீத் போல பல மாற்றூ மதத்தினரின் கட்டிடங்கள் தகர்க்கபடலாம் அதை விட அதனால் என்ன இதை சட்டம் பார்த்து கொள்ளும் என்று சட்டத்தின் மேல் நம்பிக்கை வைக்கும் எல்லா மதத்தினருக்கும் இந்தியா என்றுமே ஏமாற்றியது இல்லை.

error: Content is protected !!