கண்ணாடி அணிவதை தவிர்ப்பதற்கான காரணங்கள் இவைதான்!

கண்ணாடி அணிவதை தவிர்ப்பதற்கான காரணங்கள் இவைதான்!
ருத்துவத் துறையில் இருப்பதால் ஒரு ஆலோசனை/ அறிவுரை என்றாலும் தவறு இல்லை. ஒரு பிரமுகர். அவர் பல இடங்களிலும் பேசுகின்ற போது, அவர் பலருடைய கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகிறார். உதாரணமாக; இஸ்ரோ என்பதை இஸ்ரேல் என்று வாசித்து விட்டார்.கான்வாய் என்பதை கால்வாய் என்று வாசித்து விட்டார். அதனை பலரும் கிண்டலடித்தார்கள்.
காரணம் என்ன தெரியுமா? கண்ணில் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கண்ணாடி அணிய மறுக்கிறார்.
கண்ணில் குறையிருந்தால், வார்த்தைகளை/எழுத்துக்களை நாம் (ஜம்ப் செய்து) தாண்டிச் செல்வது அல்லது பின்னோக்கிச் செல்வது வழக்கம் தான். அது மட்டுமல்லாமல், பார்வை எனும் செயல்பாடு நமது கண்/மூளை/நம் மூளை ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு. இந்த செயல்பாடு சரியாக நடைபெறவில்லை என்றால், வாசிக்கும்போது சொற்களின் மீது விரலை வைத்துக் கொண்டு நகர்த்திக் கொண்டே வாசிப்பார்கள்.
பல நேரங்களில் நம் குழந்தைகள் கண்களில் குறையிருந்தால், இப்படி படிக்கும் போது, ஆட்காட்டி விரலால் படிக்கும் புத்தகத்தில் விரல்களை நகர்த்திக் கொண்டே படிப்பார்கள். அந்த குழந்தைகளுக்கு கண் மருத்துவரின் கவனிப்பு தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்படித்தான் கான்வாய் என்பது கால்வாய் ஆனது. இஸ்ரோ என்பது இஸ்ரேல் ஆனது. கண்ணாடி அணிந்தால் இந்த பிரச்சினைகளை கண்டிப்பாக தவிர்க்க முடியும்.
கண்ணாடி அணிவதை தவிர்ப்பதற்கு பல காரணங்கள்:
1. நம் அழகைக் கெடுக்கும்.
2. வயதானவராகக் காட்டும்.
3. மூக்கு வலிக்கும்/காதும் வலிக்கும்.
4. மற்றவர்கள் கேலி செய்வார்கள்.
5. கண்ணாடி அணிந்தால் கல்யாணம் தாமதமாகும்.
6. பொண்ணு கிடைக்காது / மாப்பிள்ளை கிடைக்காது.
7. கண்ணாடியை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் – எனக்கு பொறுமை கிடையாது
இப்படி மேலும் பல காரணங்கள்.
நம் வாழ்க்கையை நாம் வாழ, நமது மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளத்தான் வேண்டும். கண்ணாடி அணிவது கௌரவக் குறைச்சல் இல்லை.
*குறிப்பு: இது அரசியல் பதிவு இல்லை. சுகாதார அக்கறையோடு எழுதப்பட்ட பதிவு.
சரி எதுக்கு இங்கே ஐஸ்வர்யா ராயின் போட்டோ? அப்பத்தானே இந்த பதிவை படித்தீர்கள்?
(கண் தானம் என்ற அந்த புனிதமான காரியத்துக்கு ஐஸ்வர்யா ராய் எனக்கு உதவி செய்திருக்கிறார். அதற்கான நன்றி விஸ்வாசம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்).
error: Content is protected !!