கண்டுப்பிடிச்சோம் ..ஜிகா வைரைஸூக்கு மருந்து – இந்திய தகவல்!

கண்டுப்பிடிச்சோம் ..ஜிகா வைரைஸூக்கு மருந்து – இந்திய  தகவல்!

ஏடிஸ் கொசுக்களால் வேகமாக பரவக்கூடிய ‘ஜிகா’ வைரஸ் கடந்த ஆண்டு பிரேசிலில் தாக்க தொடங் கியது. தற்போது தென் மற்றும் மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது.காய்ச்சல், மூட்டுவலி, தலைவலி, உடலில் தடிப்புகள் ஏற்படுதல், கண் களில் எரிச்சல் என மனிதர்களுக்கு மிகவும் அபாயமாக உருவெடுத்துள்ள இந்த வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து களோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. கர்ப்பிணிகளை இந்த வைரஸ் தாக்கினால் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலை உள்ளிட்ட பல்வேறு பிறவிக்குறைபாடு களுடன் பிறப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு என கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் பிரேசிலில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இத்தகைய குறைபாடுகளுடன் பிறந்துள்ளன.
Jika_virus
இந்த வைரசின் வேகமான பெருக்கம் மற்றும் அதை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராய் வதற்காக உலக சுகாதார அமைப்பை சேர்ந்த வல்லுனர்கள் ஜெனீவா நகரில் சமீபத்தில் கூடி ஆலோ சனை நடத்தினர். இந்த கூட்டத்தை தொடர்ந்து, உலகளாவிய ஜிகா வைரஸ் நெருக்கடி நிலை பிரகட னம் செய்யப்பட்டது.இந்த வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கண்டறியும் பணிகளில் உலகம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.

இந்த பணியில் ஈடுபட்டிருந்த ஐதராபாத்தை சேர்ந்த ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், ஜிகா வைரஸ் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பில் தாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாக நேற்று அறிவித்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிருஷ்ண எல்லா செய்தி யாளர்களிடம் , “உலகம் முழுவதிலும் இருந்து சில புத்திக்கூர்மை வாய்ந்த வல்லுனர்களை பாரத் பயோடக் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது அச்சுறுத்தி வரும் ஜிகா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்கும் பணியில் அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே ஈடுபட்டு உள்ளனர்.அதன் பயனாக தற்போது இந்த வைரசுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை நாங்கள் தேர்ந்தெடுத்து உருவாக்கி வருகிறோம். அதில் வீரியம் நீக்கப்பட்ட தடுப்பூசி ஒன்று, தற்போது விலங்குகளில் செலுத்தி சோதனை செய்யப்படும் நிலையை எட்டிவிட்டது.

இதன் மூலம் ஜிகா வைரசுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கத்தில் முன்னேற்றப்பாதையில் நாங்கள் இருப்பதாக நம்புகிறோம். இந்த தடுப்பூசிக்காக உலகளாவிய காப்புரிமைக்கு முதன்முதலில் தாக்கல் செய்வது நாங்களாகத்தான் இருப்போம். இந்த தடுப்பூசியை உருவாக்கி விட்டோம் என்ற செய்தியை இயன்ற அளவு மிக விரைவில் உலகுக்கு அறிவிப்போம்” என்றார்..

error: Content is protected !!