கடல் கவுதம் நடிக்கும் ‘ என்னமோ ஏதோ’ ஆல்பம்

கடல் கவுதம் நடிக்கும் ‘ என்னமோ ஏதோ’ ஆல்பம்

பி.சங்கையா வழங்கும் ரவிபிரசாத் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ரவிகுமார், பி.வி.பிரசாத் தயாரிக்கும் படம், ‘என்னமோ ஏதோ’. கவுதம் கார்த்திக், ரகுல் பிரீத்தி சிங், நிகிஷா படேல், பிரபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கோபி ஜெகதீஸ்வரன். இசை, இமான். பாடல்கள், மதன் கார்க்கி. இயக்கம், ரவி தியாகராஜன். படம் பற்றி கவுதம் கார்த்திக்கிடம் கேட்ட போது”தெலுங்கில் வெளியான ‘ஆலா மொதலைந்தி’யின் ரீமேக்தான் இது. காமெடி கலந்த காதல். இதன் தெலுங்கு பதிப்பை என் அப்பா கார்த்திக்குடன் பார்த்தேன். அவர் ரசித்து சிரித்து சிரித்தார். அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கும், நிகிஷாவுக்கும் நெருக்கமான காதல் காட்சிகள் இருக்கிறது. ரகுல் பிரீத்தி சிங்குடனும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. நெருக்கமாக நடிக்கும்போது, பதற்றம் இருந்தது. ‘ஹீரோயின்களை கட்டிப்பிடிக்கும்போது பயப்படக் கூடாது’ என்று அப்பா சொல்லி இருந்ததை கடை பிடித்தேன். அப்பாவும், பிரபுவும் நெருங்கிய நண்பர்கள். இதில் பிரபு எனக்கு ஆலோசகர் வேடத்தில் நடித்துள்ளார். வீட்டில் அமைதியாக இருப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக மாறிவிடுவேன். ” என்றார்.

Related Posts

error: Content is protected !!