ஒரு பக்க மீசையை எடுத்து சாலையில் நடக்கத் தயார்.- விஜயகாந்த சவால்

ஒரு பக்க மீசையை எடுத்து சாலையில் நடக்கத் தயார்.- விஜயகாந்த சவால்

”ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை குறையைச் சொல்லிப் பேச சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் மன்றத்தில் உண்மையைப் பேசுவேன். குன்ஹா வழங்கிய தீர்ப்பு தவறு என்று போலீஸார் ஒருவராது சொல்னால் நான் ஒரு பக்க மீசையை எடுத்து சாலையில் நடக்கத் தயார்.எம்.ஜி.ஆர்.தான் தொடர்ந்து 13 ஆண்டுகள் முதல்வராக இருந்து சாதனை படைத்தவர். அவரைப் போல் யாராலும் இங்கே அப்படி இருக்க முடியாது.” என்று விஜயகாந்த தெரிவித்தார்.
vijaykanth oct 15
இன்று தனது தொகுதியான ரிஷிவந்தியம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார் தே மு தி க தலைவர் விஜயகாந்த்.அதன் ஒரு பகுதியாக, திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் ஆலூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறந்து வைத்தார். தொடர்ந்து ஜி.அரியூர் கிராமத்தில் பயணியர் மேற்கூரை திறந்து வைத்தார்.

கனகநந்தல் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் சேவை தொடங்கிவைத்து, பூமாரி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார். பின்னர், மாராமுண்டி கூட்டுச்சாலை பயணிகள் மேற்கூரை திறந்துவைத்து, பகண்டை கூட்டுச் சாலை அருகே நடந்த கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார்.

அப்போது அவர், ”காவல்துறை சரியாக இருந்தால் தமிழகத்தில் எந்தத் தவறும் நடக்காது.ஜெயலலிதா சிறையில் அடைக்கப் பட்டதை அடுத்து தமிழகத்தில் 60 பேர் இறந்ததாகக் கூறுகிறார்கள். இது குறித்து காவல் துறை ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை; தங்கள் தொகுதிகளை முன்னேற்ற சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியில் இருந்து ஒரு பைசா கூட எடுக்காமல் மக்களுக்குச் செய்கிறேன். மற்ற இடங்களில் என்ன செய்கிறார்கள் என்று காவல் துறை ஏன் விசாரிக்கவில்லை.

எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை.பழைய சட்டத்தை வைத்துக் கொண்டு தேமுதிகவை ஒடுக்க நினைக்கிறார்கள்.ஆனால், போலீஸார் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும்.தலைவன் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி என்பார்கள் அப்படித்தான், ஊழல் வழக்கில் சிறை சென்ற கட்சித் தலைவரைப் போல் தொண்டர்களும் ஊழலில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஒருவரின் குறையைச் சொல்லி ஆட்சியைப் பிடிக்க நான் விரும்பவில்லை.அரசியலுக்கு நான் பிழைக்க வரவில்லை, உழைக்க வந்திருக்கிறேன்.ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை குறையைச் சொல்லிப் பேச சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் மன்றத்தில் உண்மையைப் பேசுவேன்.குன்ஹா வழங்கிய தீர்ப்பு தவறு என்று போலீஸார் ஒருவராது சொல்னால் நான் ஒரு பக்க மீசையை எடுத்து சாலையில் நடக்கத் தயார்.

எம்.ஜி.ஆர்.தான் தொடர்ந்து 13 ஆண்டுகள் முதல்வராக இருந்து சாதனை படைத்தவர். அவரைப் போல் யாராலும் இங்கே அப்படி இருக்க முடியாது.பதவி ஏற்பு விழாவில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். ஆனால் அவர்கள் விட்டது உண்மையான கண்ணீர் அல்ல, பதவி போய்விடுமே என்று பயத்தில் அழுகிறார்கள்.

சட்ட மன்றத்தில் தேமுதிகவுக்கு இறங்கு முகம் என்று சொன்னார். ஆனால், மக்களுக்கு தெரியும் இன்று யாருக்கு இறங்குமுகம் என்று?!தாதுப் பொருள் கொள்ளையில் அதிமுக.,வைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். தமிழகத்தை ஆண்டவர்களும் சரி, ஆண்டு கொண்டிருப்பவர்களும் சரி…இலவசங்களை வைத்தே ஆட்சி நடத்துகிறார்கள்.அவர்கள் இலவலசமாகக் கொடுத்த மடிக்கணினி வைத்துக் கொண்டு ஊழல் குறித்து இன்று மாணவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

டீக்க்டை வைத்து பிழைத்தவர்கள் எல்லாம் இன்று மந்திரியாக இந்த அளவுக்கு எப்படி சொத்து சேர்க்க முடிந்தது?நான் மக்களையும் கடவுளையும் மட்டுமே நம்புகிறேன்” என்று பேசினார் விஜயகாந்த்.

error: Content is protected !!