ஒன்பதிலிருந்து பத்து வரை – ஆல்பம்

ஒரு நெடுஞ்சாலையில் நடக்கும் கதை ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’சென்னையில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் நெடுஞ்சாலையில், காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் நடக்கும் சம்பவங்களை கருவாக வைத்து, ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’ என்ற படம் தயாராகிறது.


‘காந்தர்வன்’ படத்தில் நடித்த கதிர் கதாநாயகனாக ‘கால் டாக்சி’ டிரைவர் வேடத்தில் நடிக்கிறார். அவருடைய காரில் பயணம் செய்யும் பயணியாக ஸ்வப்னா நடிக்கிறார். இவர், ‘இதிகாசம்’ என்ற மலையாள படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர். இவர்களுடன் லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, பாய்ஸ் ராஜன், ஜெகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், விஜய் சண்முகவேல் அய்யனார்.