ஒட்டு மொத்த ஹார்ட் பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை!

ஒட்டு மொத்த ஹார்ட் பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை!

உலக அளவில் உள்ள இதய நோயாளிகளில் இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.வரும் 2015ம் ஆண்டிற்குள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் 20 மில்லியன் பேர் இறக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.அது மட்டுமின்றி 2015ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் பேருக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் எல்லாவகையான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
sep 5 - health bill
இதுநாள்வரை இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க ஆஸ்பிரின் என இனி தனித்தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இனி இல்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஏனென்றால் சில நேரங்களில் நிறைய மாத்திரை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள், மறதியில் சில மாத்திரைகளைச் சாப்பிட மறந்து விடுவதுண்டு. அதனால், உருவாகின்ற பின் விளைவுகளால் அவர்கள் மேலும் அவஸ்தையுற வேண்டிய நிலை உருவாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்த புதிய மருந்து உருவாக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

பல மருந்துகளின் செயலைச் செய்யும் வல்லமைப் பெற்ற இந்த மருந்துக்கு ‘பாலி பில்’ என பெயரிட்டுள்ளனர் அதிலும் ஐரோப்பா மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதன் முடிவுகள் திருப்திகரமாக அமைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த பாலிபில்லில் ஆஸ்பிரின், ஸ்டாடின் மற்றும் இரண்டு வகையான இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் மருந்துகள் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.இந்த ஆய்வில், 62 வயதில் உள்ள சிவிடி எனச் சொல்லப்படுகிற இதய நோயாளிகள் 2004 பேர் பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த ஆய்வு கடந்த 2010 மற்றும் 2011ம் வருடக்களில் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப் பட்டது.அதனைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், இதய நோய் மருந்தின் விளைவுகள், பாதிப்புகள் மற்றும் பயன்கள் ஆகியவைக் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

One pill for all heart problems
*****************************************************
How often do you forget to pop that pill to control your shooting blood pressure? Or skip the aspirin tablet that could have prevented a stroke at night? Not anymore.For the first time, doctors and researchers have come up with a single pill for all cardiovascular diseases (CVD), including high blood pressure and vulnerability to stroke, doing away with the pain of popping multiple pills to keep your heart healthy. Trials for this new pill – called the polypill – across Europe and India have proved successful, according to a study published on Wednesday in the Journal of the American Medical Association.

error: Content is protected !!