ஐ.நா. அறிக்கையும் ஈழத்தமிழர்களும்..!

ஐ.நா. அறிக்கையும் ஈழத்தமிழர்களும்..!

ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதி மறுக்கப்பட்டுள்ளது.பன்னாட்டு நீதி விசாரணை ஏற்படுத்தப்பட்டு, புலனாய்வு செய்யப்பட்டால், நடந்தது தமிழ் இனப்படுகொலை என்பது மெய்ப்பிக்கப்படும். ஆனால், இந்த இனப் படு கொலை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு உடந்தையாக ஆயுதங்கள் வழங்கி செயல்பட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றச்சாட்டுகளி லிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவே இலங்கை அரசை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்தன.
edit oct 4
01-10-2015 அன்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரணத்திலும் வேதனையிலும் தவிக்கும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்யப் போகிறோமோ?உள்ளக விசாரணை என்று அமெரிக்கா சொல்வது பம்மாத்து வேலை. இராஜபக்‌ஷே இருந்தவரை சர்வதேச சுதந்திரமான விசாரணை என்று சொல்லிவிட்டு, ரணில் அமெரிக்காவின் ஆதரவாளர் என்பதால் அமெரிக்கா இலங்கையிலே விசாரணையினை மேற்கொள்ளலாம் என்று அந்தர்பல்டி அடித்துவிட்டது.

நீதி ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.உலக அளவில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் கொதித்தெழுந்துள்ளனர். நியாயங்கள் நிராயுதபாணியாகவும், உண்மைகள் உறங்குகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலேயே உள்ளனர். விடியல் எல்லை. ஈழத்தமிழருக்கு என்றுதான் வாழ்வுரிமை கிடைக்கப் போகின்றதோ என்று வேதனைப்படுகின்றோம்.இந்தியாவின் பாதுகாப்பும், இந்துமகாசமுத்திரத்தின் அமைதித்தன்மையினை தக்கவைக்கவாவது ஈழத் தமிழர் பிரச்சனையில் குரல்கொடுக்கவேண்டும். ஆனால் இந்தியா யாரோக்கோ வந்த நிலை என்று பாராமுகமாக இருப்பதை வரலாறு மன்னிக்காது.

சர்வதேச சுந்தந்திரமான விசாரணை முழுமையாக நடத்தப்படவில்லை என்று ஈழத்தில் அபயக்குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். ஈழ ஆதரவாளர்கள் ஒருபோதும் தங்களுடைய போர்க்குணத்தில் இருந்து தளர்ந்துவிட மாட்டார்கள் என்பதை ஆதிக்க சக்திகள் அறிந்துகொள்ள வேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

Srilankan Tamils, UNHRC Report

error: Content is protected !!