ஐ.கியூ. போட்டியில் டாப் ஒன் இடம் பிடித்த 12 வயது இந்திய வம்சாவளிச் சிறுமி!

ஐ.கியூ. போட்டியில் டாப் ஒன் இடம் பிடித்த 12 வயது இந்திய வம்சாவளிச் சிறுமி!

ஐ.க்யூ என்பாப்டும் அறிவுக்கூர்மையில் சிறப்பிடம் பெற்றிருந்த இயற்பியல் வல்லுனர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுமி லண்டனில் நடைபெற்ற ’மென்ஸா ஐ.கியூ.’ போட்டியில் 162 புள்ளிகளை பெற்று உலக அளவில் அறிவுக்கூர்மையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
i q child
மனிதர்களின் பொதுஅறிவுத் திறனை மதிப்பிடும் உலகின் மிகப் பழமையான ’மென்ஸா’ நிறுவனம் நடத்திய அறிவுக்கூர்மை (ஐ.கியூ.) சார்ந்த கேட்டல்- III B போட்டியில் பங்கேற்ற லிடியா செபாஸ்டியன் என்ற 12 வயது சிறுமி 150 நிமிடங்கள் நடைபெற்ற பொதுஅறிவு தொடர்பான தேர்வில், தனக்கு அளிக்கப்பட்ட மிகக் கடினமான கேள்விகளுக்கு வெகு சுலபமாக பதில் அளித்து 162 ஐ.கியூ. புள்ளிகளுடன் முதல் இடத்தில் வந்துள்ளார்.

கால்செஸ்ட்டர் பொது மருத்துவமனையில் கதிர்வீச்சுத் துறை நிபுனராக பணியாற்றிவரும் இவரது தந்தையான அருண் செபாஸ்டியன் இங்குள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியில் வசித்து வருகிறார்.சிறுவயதிலிருந்தே அதிக அறிவுக்கூர்மை மிக்க பெண்ணாக வளர்ந்துவந்த தனது மகள் லிடியா, தாமாகவே முன்வந்து இண்டர்நெட் மூலமாக பொதுஅறிவு தொடர்பான கேள்வி-பதில்களை படித்தறிந்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக அருண் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஆறுமாத குழந்தையாக இருந்தபோதே லிடியா பேச ஆரம்பித்து விட்டதாகவும், நான்கு வயதில் இருந்தே வயலின் வாசிக்க கற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டதாகவும், ஹாரி பாட்டர் கதைகளின் ஏழு தொடர்களையும் குறைந்தபட்சம் மூன்றுமுறைக்கு மேல் அவள் வாசித்துள்ளதாகவும் லிடியாவின் பெற்றோர் பூரிப்புடன் கூறுகின்றனர்.

அறிவுக்கூர்மையில் சிறப்பிடம் பெற்றிருந்த இயற்பியல் வல்லுனர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் அறிவுத்திறனே 160 ஐ.கியூ. புள்ளிகள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் 162 புள்ளிகளுடன் இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்த சிறுமி லிடியா செபாஸ்டியன் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்தான்.

Related Posts

error: Content is protected !!