ஐபிஎம் நிறுவனத்திலிருந்து 15000 பேர் பணி நீக்கம்!

ஐபிஎம் நிறுவனத்திலிருந்து 15000 பேர் பணி நீக்கம்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் தங்களது கம்பெனியில் மறுசீரமைப்பு பணியை துவக்கியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து 15000 பேர் பதவி இழப்பார்கள் என தெரிகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பியா பகுதியில் செயல்படும் இந்நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலனவர்கள் வீட்டுக்கு போகும் நிலை ஏற்படும் என தெரிகிறது.
ibm feb 15
ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது.அண்மையில் கூட மனிதனின் மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் அதிநவீன கணனியை ஐபிஎம் நிறுவனம் வடிவமைத்துள்ளது நினைவிருக்கும்.இந்நிலையில் இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பியா பகுதியில் செயல்படும் ஐபிஎம் ஊழியர்களில் பெரும்பாலனவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என தெரிகிறது. ஐபிஎம் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் 1 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

அந்நிறுவனத்தின் இந்த முடிவால், இந்தியாவில்தான் பெரிய அளவு பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. இந்நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் பணிபுரியும் 50 பேருக்கு பிப்ரவரி 12ந் தேதி சிவப்பு அட்டை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரான லீ கான்ராட் கூறும்போது, 15 ஆயிரம் ஊழியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

IBM to cut 15,000 jobs worldwide, India operations to be majorly affected
******************************************************************************************
Technology giant IBM has started a restructuring process, which would see as many as 15,000 jobs being cut globally, including India, Brazil and the European region. “The estimate of jobs cut globally is 15,000,” international coordinator at the Alliance@IBM (official IBM employees union) Lee Conrad told PTI.

error: Content is protected !!