ஐந்து நட்சததிர ஹோட்டல்களில் அரசு விழா நடத்த தடை!

ஐந்து நட்சததிர ஹோட்டல்களில்  அரசு விழா நடத்த தடை!

இந்திய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதில் அரசு நிகழ்ச்சிகளை 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தக் கூடாது ,அரசுத் துறைகளில் புதிய பதவிகளை உருவாக்கக் கூடாது ,அரசுத் துறையில் புதிய நியமனங்களுக்கு தடை, திட்டமில்லா செலவுகள் 10 சதவீதம் குறைப்பு போன்ற சிக்கன நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
sep 19 - indian money symbal
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நாள்தோறும் அடையும் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் இந்திய பொருளாதாரம் நிலையில்லாமல் தள்ளாடி வருகிறது. “பொருளாதார நிலைமை விரைவில் சரியாகி விடும்; ரூபாய் மதிப்பு உயரும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என இது வரை பேசி வந்த மத்திய அரசு கடுமையான நிதிப் பற்றாக்குறையால் தற்போது விழி பிதுங்கி போயுள்ளது.இதையடுத்து இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக அதிரடியாக சில சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக,மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் நிதி அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,”நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக அரசின் செயல்பாடுகளுக்கு பாதகம் இல்லாத சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கையில் உள்ள நிதி ஆதாரத்தை வைத்து செலவினங்களை ஒழுங்குபடுத்த திட்டமிடப் பட்டுள்ளது.இதன்படி திட்டமில்லா செலவினங்களில் 10 சதவீதம் குறைக்கப்படும். மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்படுவதோடு, அரசுத் துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.மேலும் அரசின் முக்கியமான கருத்தரங்குகளை, ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தக் கூடாது. உயரதிகாரிகளைத் தவிர மற்ற அதிகாரிகள் உள்நாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் போது விமானங்களில் சாதாரண வகுப்புகளில் தான் பயணிக்க வேண்டும்”என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Government bans meetings in 5-star hotels
*****************************************************************
Government departments have been banned from holding meetings in 5-star hotels and officials barred from executive class air travel as part of a slew of austerity measures announced today to cut non-plan expenditure by 10 per cent.

Related Posts

error: Content is protected !!