ஐந்தில் ஒருவர் கற்பழிக்கப்படுகிறார்: அமெரிக்க அரசின் அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

ஐந்தில் ஒருவர் கற்பழிக்கப்படுகிறார்: அமெரிக்க அரசின் அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

”அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் கிட்டத்தட்ட 18 வயதிற்கு குறைவான இளம் பெண்களாகவே உள்ளனர். அனைத்து இனத்தை சேர்ந்த பெண்களும் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறபோது குறிப்பிட்ட சில பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.“ என்று அமெரிக்க அரசின் சார்பில் வெளியான அறிக்கையில் வெளியான தகவல் பலதரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
jan 24 - rape america
அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புகள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடக்கவுள்ள நிலைமையில் தற்போது இந்த ஆய்வு ஆறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில்,”அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிபேர் கிட்டத்தட்ட 18 வயதிற்கு குறைவான இளம் பெண்களாகவே உள்ளனர். அனைத்து இனத்தை சேர்ந்த பெண்களும் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறபோது குறிப்பிட்ட சில பெண்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் 33.5 சதவிகிதம்பேர் கலப்பு இனத்தை சேர்ந்த பெண்கள் ஆவர். 27 சதவிகித அமெரிக்க இந்திய பெண்களும், ஹிஸ்பேனிக் இன பெண்கள் 15 சதவிகிதம், கருப்பு இனத்தவர்கள் 22 சதவிகிதம், வெள்ளை இனப்பெண்கள் 19 சதவிகிதத்தினரும் கற்பழிக்கப்படுகின்றனர்.

இந்த கற்பழிப்புகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடக்கிறது. 98 சதவிகிதம் கற்பழிப்புகள் ஆண்களாலேயே நடக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஆண்களும், சிறுவர்களும் இந்தபாதிப்புக்கு ஆளாகின்றனர். இதில் 71 ஆண்களுக்கு ஒருவர் கற்பழிக்கப்படுகிறார். ”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Every fifth woman in US gets raped: Report
**************************************************************
Nearly 22 million women – about one in five – have been raped in their lifetimes in the US, with nearly half of the victims subjected to sexual assault before the age of 18, according to a White House report.

Related Posts

error: Content is protected !!