ஐநா சபையில் சர்வதேச சூரிய கூட்டணிக்கு அனுமதி! – இந்தியா தீர்மானம் தாக்கல்

ஐநா சபையில் சர்வதேச சூரிய கூட்டணிக்கு அனுமதி! –  இந்தியா தீர்மானம் தாக்கல்

நா. சபை பொது பேரவை கூட்டங்களில் பார்வையாளராக சர்வதேச சூரிய கூட்டமைப்பு அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

 

2015ஆம் ஆண்டு இந்தியாவும் பிரான்சும் இணைந்து சர்வதேச சூரிய கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. சூரிய மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த சர்வதேச சூரிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இப்பொழுது இந்த சர்வதேச சூரிய கூட்டணியில் எண் 124 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சர்வதேச சூரிய கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர பார்வையாளர் வழங்கப்பட்டால் அதன் பிரதிநிதிகள் எல்லாக் கூட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். உலக நாடுகளில் எதிர்கொள்ளும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் குறிப்பாக சூரிய மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் சர்வதேச சூரிய கூட்டணி உதவும். ஐக்கிய நாடுகள் சபை சூரிய மின்சாரம் தொடர்பான தனது கொள்கைகளை மேம்படுத்தவும் அமைப்புகளை உருவாக்கவும் நாடுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இந்த கூட்டணி உதவியாக அமையும் என்று இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் பேரவையில் முன்வைக்கப்படும் பார்வையாளர் அந்தஸ்து தொடர்பான கோரிக்கைகளுக்கு தேவையான பரிந்துரைகள் வழங்குவதற்காக இயங்கி வருகிறது அந்த கமிட்டிக்கும் இந்தியாவின் சார்பில் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொது பேரவை இந்தியா பிரான்சிஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த கோரிக்கையை 80 நாடுகள் வழிமொழிந்து உள்ளன.

ஏற்கனவே பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் நிரந்தர பார்வையாளர் அந்தஸ்து பொதுப்பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள் அதேபோல சர்வதேச சூரிய கூட்டம் இருக்கும் நிரந்தர பார்வையாளர் அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு உள்ளது.

error: Content is protected !!