ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் இளைஞரணியை சேர்ந்த மாறன்

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் இளைஞரணியை சேர்ந்த  மாறன்

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் வெ.மாறன் போட்டியிடுவார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. அயோத்தியாபட்டினம் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகியாக இருந்து வருகிறார்.
11 - earkadu maran
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.பெருமாள் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, டிசம்பர் 4ம் தேதி ஏற்காடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் நவம்பர் 9ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். நவம்பர் 18ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது.

20ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள். டிசம்பர் 4ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இன்று காலையில் விருப்ப மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.மொத்தம் 8 பெண்கள் உள்பட 43 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு வரையும் அழைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்தினார்.

மதியம் 1 மணி வரை நடந்த நேர்காணலின்போது, அதில் பங்கேற்றவர்களிடம் அவர் கட்சியில் வசிக்கும் பதவி, ஆற்றிய பணிகள், வெற்றி வாய்ப்புக்கான காரணம், தேர்தல் செலவுக்கான வசதி ஆகியவை குறித்து கேட்கப்பட்டது.கூட்டம் முடிந்ததும் ஏற்காடு தொகுதி தி.மு.க. வேட்பாளராக மாறன் போட்டியிடுவார் என்று கருணாநிதி அறிவித்தார்.

error: Content is protected !!