ஏடிஎம் பாஸ்வேர்ட் திருட்டை தடுக்கும் வகை புதிய தொழில்நுட்பம்!

ஏடிஎம் பாஸ்வேர்ட் திருட்டை தடுக்கும் வகை  புதிய தொழில்நுட்பம்!

ஏடிஎம் கார்டுகளில் பல மோசடிகள் நடக்கின்றன. பிரத்யேக கருவிகள் மூலம் டூப்ளிகேட் போட்டு பணத்தை சுருட்டுகிறார்கள். ஏடிஎம்மையே ‘வேரோடு’ லபக்குகிறார்கள்.இந்நிலையில் அதிலும் அகச்சிவப்பு (இன்ஃப்ரா ரெட்) கேமரா இருந்தால் போதும்.. ஏடிஎம் இயந்திரத்தில் நீங்கள் அழுத்துகிற பாஸ்வேர்டு எண்களை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். -இதற்கிடையில் ஏடிஎம் குறீயீட்டு எண் திருட்டை தடுக்கும் வகையில் “டிரை பின்” எனப்படும் புதிய தொழில் நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்த பட இருக்கிறது. இந்த தொழில் நுட்பத்தில் வண்ணங்கள், எண்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்தி விசைபலகை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் விசைபலகை மாற்றமடையும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
jan 24 - tec atm
இதில் பயனாளிகள் தங்களுக்கு பிடித்த நிறம், வடிவம், குறியீடு மற்றும் எண்கள் அடங்கிய கடவுச்சொல்லை தேர்வு செய்யலாம். தற்போது நடைமுறையில் உள்ள நான்கு இலக்க கடவுச்சொல் திருட்டை தடுக்கும் வகையில் இது உருவாக்கபபட்டுள்ளது.

ஏ.டி.எம் திருட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நண்பரான கிளைன் ரெனால்ட்ஸ் என்பவர் இந்த புதிய முறையை கண்டறிந்து உள்ளார். இந்த புதிய முறையானது மிகவும் பாதுகாப்பானதாகவும் மற்றவர்களால் திருட முடியாத வகையிலும் உருவாக்கபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

New ATM anti-fraud system uses colours, symbols and numbers

error: Content is protected !!