எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சுத்தமில்லை! – மத்திய அரசு தகவல்

எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் சுத்தமில்லை! – மத்திய அரசு தகவல்

நம் நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு நாடு முழுவம் முழு சுகாதாரத்தை எட்டும் வகையில் ‘தூய்மை இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை சுகாதாரமாகப் பராமரிக்கும் வகையில் ‘தூய்மையான ரயில் தூய்மையான இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் ரயில் நிலையங்களின் சுத்தம் குறித்த ஆய்வு ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நடைபெற்றது.
rail statio
நாடு முழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் உள்ள ‘ஏ-1’ பிரிவின் கீழ் வரும் 75 ரயில் நிலையங் களி லும், ‘ஏ’ பிரிவின் கீழ் வரும் 332 ரயில் நிலையங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ரயில் நிலையங்களில் காத்துக் கொண்டிருந்த சுமார் 1,34,564 பயணிகளிடம் இந்த ஆய்வு நடைபெற்றது. ரயில் நிலைய கட்டமைப்பு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட 47 பிரிவுகளின் கீழ் பயணிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வின் முதல்கட்ட முடிவுகள் நேற்று மத்திய ரயில் அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இதில் ‘ஏ-1’ பிரிவின் கீழ் சூரத், ராஜ்கோட், பிலாஸ்பூர் ஆகிய ரயில் நிலையங்கள் முறையே முதல் 3 இடங் களைப் பிடித்தன. தெற்கு ரயில்வே மண்டலத்தில் மதுரை ரயில் நிலையம் 9-வது இடத்தைப் பிடித்தது. தெற்கு ரயில்வேயின் தலைமையிடமாக விளங்கும் சென்னையில் உள்ள இரு பிரதான ரயில் நிலையங்களான எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை.

இதேபோல ‘ஏ’ பிரிவு ரயில் நிலையங்களில் பியாஸ், காந்திதாம், வாஸ்கோ-டா-காமா ரயில் நிலையங்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. தெற்கு ரயில்வே கீழ் வரும் கும்பகோணம் 5-வது இடத்தையும், சேலம் 7-வது இடத்தையும், கோவில்பட்டி 10-வது இடத்தையும் பெற்றன.

இந்த ஆய்வு குறித்த முழுமையான அறிக்கையை ஐ.ஆர்.டி.சி. நிறுவனம் விரைவில் ரயில்வே அமைச்சகத்திடம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

Related Posts

error: Content is protected !!