எல்லா வகையான 4 சக்கர வாகனங்களிலும் FasTag எனப்படும் மின்னணுக் கருவி கட்டாயம்!

எல்லா வகையான  4 சக்கர வாகனங்களிலும் FasTag எனப்படும்  மின்னணுக் கருவி  கட்டாயம்!

சுங்கச்சாவடிகளில் நான்கு சக்கர வாகனங்களிடம் சுங்கவரி வசூலிக்கும்போது நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நேரம் விரயம் ஏற்படுவதோடு, எரிபொருட்களும் வீணாகும் சூழல் நிலவி வருகிறது. மேலும் கட்டணத்தை பணமாக செலுத்தும்போது சில்லறை தட்டுப்பாடு பிரச்சனைகளும் ஏற்படுகிறது.இந்நிலையில், டிசம்பர் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் அனைத்து 4 சக்கர வாகனங்களிலும் FASTag(RFID – radio-frequency identification device) எனப்படும் மின்னணு கருவியை பொறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.

இந்த கருவியை பொருத்துவதன்மூலம் வாகன ஓட்டிகள் PrePaid முறையில் தங்களின் Fastag கணக்கில் பணம் வைத்துக்கொள்ளலாம். சுங்கச்சாவடியை வாகனங்கள் கடந்துசெல்லும்போது அங்கே பொறுத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் மூலம் வாகன ஓட்டிகளில் FasTagஇல் இருந்து சுங்கக்கட்டணத்தை ONline மூலம் Transfer செய்துகொள்ளப்படும். ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடியை கடக்கும்போது தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்துக்கொள்ளப்படும். இதன்மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நேர விரயமும், எரிபொருள் விரயமும் வெகுவாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியானது நான்கு சக்கர வாகனத்தின் முன்பக்க கண்ணாடியின் நடுப்பகுதியில் பொறுத்தப்பட்டிருக்கும். ஏற்கனவே வாகனங்களை வைத்திருப்பவர்கள், சுங்கச்சாவடி மையங்களில் ( NHAI toll booth) வாகனப்பதிவுச் சான்றிதழ், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைக்கொண்டு இக்கருவியை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!