‘என்றென்றும் புன்னகை’படத்தில் மேலும் ஒரு பாடல் + ஆல்பம்

‘என்றென்றும் புன்னகை’படத்தில் மேலும் ஒரு பாடல் + ஆல்பம்

ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா நடிக்கும் படம் ‘‘என்றென்றும் புன்னகை’’, டாக்டர் வி.ராம்தாஸ், தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். அகமது இயக்கி உள்ளார்.விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகவிருக்கும் த்ரிஷாவுக்கும் இது முக்கியமான படமாகும நிலையில் நீ தானே என் பொன்வசந்தம், முகமூடி, டேவிட் என ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ள ஜீவாவிற்கு இது முக்கியமான படமாம்.

மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு கடந்த அக்டோபர் 24ல் உலக நாயகன் கமல்ஹாசனால் வெளியிடப்பட்டது. முன்னதாக இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

படத்தைப் பார்த்துவிட்டு புதிய பாடல் ஒன்றினை ரெக்கார்ட் செய்திருப்பதாகவும், ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் என்றும் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.கேட்கிற பாடல்களை கொடுப்பதற்கே பாடலுக்கு மூன்று மாதம் வரை எடுக்கும் ஹாரிஸ் இப்போது கேட்காமலேயே ஒரு பாடலை தந்திருப்பதை கண்டு கோலிவுட்டே ஆச்சர்யத்தில் உள்ளதாம.

error: Content is protected !!