என்னை டைவோர்ஸ் பண்ணாமல் இரண்டாம் திருமணமா? – சரிதா ஆவேசம்

என்னை டைவோர்ஸ் பண்ணாமல்  இரண்டாம் திருமணமா? – சரிதா ஆவேசம்

முகேசம் நானும் சட்டபடி விவாகரத்து வாங்கவில்லை இல்லை.. இல்லை!.நான் இந்தியாவில் இல்லை என்பதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு, முதல் மனைவி நான் இருக்கும் போதே சட்டவிரோதமாக இரண்டாம் திருமணம் செய்துள்ளார் முகேஷ். இதை நான் சும்மா விடப் போவதில்லை. சகல வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போகிறேன்.”என்று துபாயில் இருந்து எச்சரிக்கை விடுத்துள்ளார் சரிதா.
27 - saritha mugesh
நடிகை சரிதாவுக்கும் மலையாள நடிகர் முகேசுக்கும் கடந்த 1989–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஷர்வன், தேஜஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரிதாவுக்கும் முகேசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

பின்னர் முகேசுக்கும் கேரளாவில் பிரபல நடன ஆசிரியையாக உள்ள தேவிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு. இருவரும் கேரளாவில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தது.

இப்படி முகேஷ் 2–வது திருமணம் செய்து கொண்டதை அறிந்ததும் நடிகை சரிதா அதிர்ச்சி அடைந்தார். தங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதாக கூறப்பட்ட தகவலை மறுத்துள்ள அவர் 2–வது திருமணம் செய்த கணவர் முகேஷ் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகை சரிதா விடுத்துள்ள அறிக்கையில்,”என் மகன் ஷர்வன் துபாயில் மருத்துவ படிப்பு தொடர்வதால் அங்கு தங்கி இருக்கும் சூழ்நிலையில் உள்ளேன். 2 நாட்களுக்கு முன்பு முகேஷ், தேவிகா என்ற பெண்ணை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். உண்மையில் திருமணத்துக்குப் பிறகு, எத்தனை நல்ல டீசன்டான வாய்ப்புகள் வந்தும் அவற்றில் நடிக்க என்னை முகேஷ் அனுமதிக்கவில்லை. இதனால் பல நல்ல வாய்ப்புகளை இழந்தேன். அதுமட்டுமல்ல முகேஷ் என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் செய்த சித்திரவதைகள் கொஞ்சமல்ல. குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு என்னையும் துன்புறுத்தினார்.

இதெல்லாம் என் குழந்தைகளை மனதளவில் பாதித்ததால், அவர்களை அழைத்துக் கொண்டு 2007-ல் முகேஷைப் பிரிந்து வந்துவிட்டேன். உடனடியாக இந்து திருமணச் சட்டம் பிரிவு 13 (1) மற்றும் 13 (i-a) கீழ் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.ஆனால் முகேஷ் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் எனக்கு விவாகரத்து தர பிடிவாதமாக மறுத்தார். மேலும் என் மனுவுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்தார். ஆனால் பின்னர் அவரே பரஸ்பர விவாகரத்து செய்து கொள்ளலாம் என என்னிடம் கேட்டுக் கொண்டார். வெளியில் சொல்ல முடியாத முகேஷின் டார்ச்சர், குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை கருத்தில் கொண்டு பரஸ்பர விவாகரத்து சம்மதித்தேன்.

2009-ல் பரஸ்பர விவாகரத்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தோம். ஆனால் அதன் பிறகு எந்த வாய்தாவிலும் அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவே இல்லை. ஆனால் நான் மட்டும் வெளிநாட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் வந்து சென்றேன். தொடர்ச்சியாக முகேஷ் வராததால், நான் பரஸ்பர விவாகரத்து வழக்கை 2010-ல் வாபஸ் பெற்றேன். எனவே அதன் பிறகு முகேஷுக்கு விவாகரத்து குறித்து எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை.நான் இந்தியாவில் இல்லை என்பதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு, முதல் மனைவி நான் இருக்கும்போதே சட்டவிரோதமாக இரண்டாம் திருமணம் செய்துள்ளார் முகேஷ். இதை நான் சும்மா விடப் போவதில்லை. சகல வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போகிறேன். முகேஷ் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறேன்.”என்று சரிதா தெரிவித்துள்ளார்

போட்டோ உதவி::Augustus Binu(http://en.wikipedia.org/wiki/File:Mukesh_DSW.jpg)

error: Content is protected !!