எதையும் இலவசமாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.- கமல் பேச்சு!

எதையும் இலவசமாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.- கமல் பேச்சு!

“உலகத்திலேயே மிகப் பெரிய இசை விழா சென்னையில் நடக்கும் இந்த இசை விழாதான். அந்த புள்ளி விவரம் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது.அதையும் சேவையாக செய்யாமல் வெற்றிகரமான வர்த்தக விழாவாக மக்களை அடையச் செய்தது பெரிய சாதனை. எதையும் இலவசமாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.”ன்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்ர்.

சென்னையில் திருவையாறு 9-ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சியை சென்னையில் கமல்ஹாசன் குத்து விளக்கேற்றி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.விழாவில் கமல் பேசும்போது,”இந்த மேடையில் ஏறுவதற்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கிக் கொடுத்த என் பெற்றோர், என் கலை ஆசான் சண்முகம் அண்ணாச்சி, நடன ஆசான் நடராசன், இசையில் என்னைத் தேற்றிய மதுரை வெங்கடேசன், பாலமுரளிகிருஷ்ணா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. மேடைக்காக இல்லை; இது நிஜம்.

இசை அரசர்களும் நடன அரசர்களும் இருக்கும் இந்த மேடையில் ஒரு ரசிகனாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்த இசை விழாவை பெரிய விழாவாக எடுத்து சென்றதுதான் இவர்கள் செய்த சாதனை. அதை சேவையாக செய்யாமல் வெற்றிகரமான வர்த்தக விழாவாக மக்களை அடையச் செய்தது பெரிய சாதனை. எதையும் இலவசமாக கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எனக்கு கிடைத்த புள்ளி விவரத்தின்படி உலகத்திலேயே மிகப் பெரிய இசை விழா சென்னையில் நடக்கும் இந்த இசை விழாதான். அந்த புள்ளி விவரம் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது.

உலக கலைகளையும் இசைக் கலைஞர்களையும் தெரிந்து கொள்ளும் மேடையாக இதைப் பார்க்கிறேன். யாரும் கிணற்றுத் தவளையாக இருந்து விடக் கூடாது. அந்த வழியில் உலகத்துக்கு நல்ல இசையை இந்த விழா அளிக்கட்டும். அதற்கான நல்ல களத்தை ஏற்படுத்தித் தந்த அனைவருக்கும் நன்றி. இசைக் கலைஞர்கள் என் மீது கொண்டுள்ள அன்பு பல ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களுக்கு உள்ள திறமையும் என் மீது அவர்கள் வைத்துள்ள அன்பும் வியக்க வைக்கிறது. அவர்களுடைய திறமை நீடிக்கும் என்பது எனக்குத் தெரியும். அன்பும் அது போலவே இருக்க ஆசைப்படுகிறேன்” என்றார் நடிகர் கமல்ஹாசன்.


முன்னதாக இசை விழாவில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் பி.எஸ்.நாரயணசாமி, நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜா உள்ளிட்ட பலரை கௌரவித்தார். அந்த விழாவின் தொடக்கமாக பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன. நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜாவின் நடன நிகழ்ச்சியும் கர்நாடக இசைப் பாடகி நித்ய ஸ்ரீமகாதேவனின் இசைக் கச்சேரியும் முதல் நாள் நிகழ்ச்சிகளாக நடைபெற்றன. வரும் 25 ஆம் தேதி வரை சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது.

error: Content is protected !!