எச்எம்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

எச்எம்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் செப்.14, 22 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
job sep 7
பணி: Executive (Technical “A” (or) “B”)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.12,000 – 14,000

வயதுவமர்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எதாவதொரு துறையில் பிஇ முடித்து சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Associate “A”

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.10,000 – 11,000

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.எஸ், பி.காம், பி.ஏ போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து MS Office, Tally பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்திருந்தால் விரும்பத்தக்கது.

பணி: Senior Associate “A” or “B”

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.10,000 – 11,000

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Associate “B”

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.10,000 – 11,000

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் பாடத்தை கொண்ட ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். MS Office, Tally பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்திருந்தால் விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கு வரும்போது பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரி வசம் ஒப்படைக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: Executive (Technical “A” (or) “B” மற்றும் Junior Associate “A” பணிகளுக்கு 14.09.2015 அன்று காலை 10 மணிக்கு HMT Machine Tools Limited, HMT Bhavan, #59, Bellary Road, Bangalore – 560032.

Senior Associate “A” or “B” மற்றும் Junior Associate “B” பணிக்கு 22.09.2015 அன்று காலை 10 மணிக்கு HMT Machine Tools Limited, Bangalore Complex, Jalahalli, Bangalore – 560013.

மேலும் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hmtindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும் .

error: Content is protected !!