ஊட்டி ரேடியோ தொலைநோக்கியை கொண்டு நட்சத்திர ஆய்வு!

ஊட்டி ரேடியோ தொலைநோக்கியை கொண்டு நட்சத்திர ஆய்வு!

நம்ம இந்தியாவிலே தேசிய அறிவியல் தினம், ஆண்டு தோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. ராமன் விளைவு கண்டுப்பிடிப்புக்காக சர்.சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. இதனை கவுரவிக்கும் வகையில்தான் இந்த அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஊட்டி முத்தோரை கிராமத்தில் அமைந்துள்ள ரேடியோ வானியல் மையம் இந்த ஆண்டிற்கு தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகளை வரும் 28ம் தேதி கொண்டாடவுள்ளது.
ooty feb 19
இந்த ஆய்வு மையத்தில் உலகில் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியான ஊட்டி ரோடியோ தொலை நோக்கி உள்ளது. இந்த தொலை நோக்கி பல வானியல் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் தின ஏற்பாட்டின் முக்கிய நோக்கம், மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை உருவாக்குவதும், ஊக்குவிப்பதுமாகும். பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகிறது. அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அறிவியல் கட்டுரை எழுதுதல், வினாடி வினா, விஞ்ஞான நிகழ்வுகளை வரைதல் போன்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இது வரை மாவட்டத்தில் உள்ள 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 18ம் தேதி விஞ்ஞான மாதிரி காட்சிகள் அமைக்க பதிவு செய்துள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். தேசிய அறிவில் தினமான வரும் 28ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளாக, ஊட்டி ரேடியோ தொலைநோக்கியை கொண்டு நட்சத்திர ஆய்வு நடத்தப்படவுள்ளது. மேலும், சூரியனையும், சூரிய புள்ளிகளையும் ஆராய்தல், ஊட்டி ரோடியோ தொலை நோக்கியின் எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் அமைப்புகளின் விளக்கம், தற்போதைய முன்னணி வானியற்பியல் ஆராய்ச்சி விளக்கங்கள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் காட்சி கூடங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் விஞ்ஞான மாதிரிகள் ஆகியவைகள் இடம் பெறும். இந்த அறிவியல் தின நிகழ்ச்சிகளை அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காணலாம். அனுமதி இலவம். எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

error: Content is protected !!