உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணைந்தது ஜெய்ப்பூர்!- யுனெஸ்கோ அறிவிப்பு!

உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணைந்தது ஜெய்ப்பூர்!- யுனெஸ்கோ அறிவிப்பு!

இராஜஸ்தானின் தலைநகராக ஜெய்ப்பூர் விளங்குகிறது. இதற்கு பிங்க் சிட்டி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தியா தங்க முக்கோணத்தில் மூன்றாவது சுற்றுலா தளமாக சேர்க்கப் பட்டுள்ளது. தில்லியிலிருந்து 300 கி.மீ. தென் மேற்காவும்ää ஆக்ராவுக்கு 200 கி.மீ. மேற்கிலும் அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் நகரம் ஏழு நுழைவாயில் மூலம் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஜெய்ப்பூர், உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது.

அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த ஜெய்ப்பூரை உருவாக்கியவர் போர்வீரர் மற்றும் வானியல் நிபுணரான மகராஜா இரண்டாம் ஜெய்சிங் இவரும் இவருடைய சந்தையரும் மொகலாயரிடம் சிறந்த நல்லுறவு வைத்திருந்தனர். மோகலாய பேரரசின் வீழ்ச்சியின் போது இவர்கள் ஆம்பரிலிருந்து ஜெய்ப்பூரிற்கு தலைநகரை மாற்றி ஆட்சி செய்தனர். ஜெய்ப்பூரை வடிவமைத்தவர் வித்யாதர் பட்டாச்சாரியர் என்ற வங்காளி ஆவார். இவர் சில்;ப சா!;;திரம் என்ற இந்து கட்டிட கலையின் அழப்படையை வைத்து உருவாக்கினார். நகர அரண்மனை உலகின் பெரிய கல் வானியியல் அப்சர்வேடிரியும் சில்ப சாஸ்திரம் மூலம் வடிவமைத்தார்.

யுனெஸ்கோ அமைப்பின் புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில், ”கலாச்சாரம் மற்றும் வீரம் சம்பந்தப்பட்ட நகரம் ஜெய்ப்பூர். ஜெய்ப்பூரின் விருந்தோம்பல் எல்லா இடங்களிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. இந்த நகரம் புராதன நகரங்கள் பட்டியலில் தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை அகமதாபாத் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!