உலக சிக்கன தினம் – அக்டோபர் 30

உலக சிக்கன தினம் – அக்டோபர் 30

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பு மிகுந்தாலும் குறைந்தாலும் உண்ணவே முடியாது இல்லையா? அதே போல வாழ்க்கை பயணத்தில் செலவு மிகுந்தாலும் குறைந்தாலும் நம்மால் கட்டுபடுத்த முடியாமல் போகும். வாழ்க்கை ஒரு சதுரங்கம் இப்படி தான் விளையாடவேண்டும் என்று யாரும் சொல்லுவது கிடையாது மாறாக இப்படி தான் உங்களால் விளையாட முடியும் என்ற தடைகள் இருக்கின்றது.
30 - world saving day
பணத்தின் பயணத்தை கட்டுபடுத்துவது சிக்கனம் பணத்தையே கட்டுபடுத்துவது கஞ்சத்தனம். அது என்ன செலவு மிகுதி, உங்கள் செலவு எப்படி இருக்கவேண்டும், வரவை விட குறைவாக இருக்க வேண்டும். அதற்க்கு திட்டம் இடுவதே ஒரே வழி, திட்டம் எல்லாம் தீட்டி எங்களால் செலவு செய்ய முடிய வில்லை.மாதத்தின் முதல் நாள், “இந்த மாசமாவது நம்ம எப்படியாவது சேமிக்கணும்”. இப்படி தான் எல்லா மாதமும் தொடங்கும் ஆனால் சேமிப்பு என்பது ஒரு கனவாகவே சென்று விடுவது நடந்தேறும் உண்மை.

எப்படி சேமிப்பது, இதற்க்கு உதாரணம் நமது இந்திய அரசு. புயல் சுனாமி வறட்சி பஞ்சம் வெள்ளம் இப்படி எத்தனை பேரழிவுகள் இதை எல்லாம் அப்படி சமாளிக்கிறது நமது அரசு. இதை போன்ற இயற்க்கை பேரழிவின் பொது சமாளிக்க உணவை சேமித்து வைக்கிறது.மாதத்தின் முதலிலேயே ஒரு சிறு தொகையை சேமிப்புக்காக எடுத்து வைத்தால் தான் வீண் விரயத்தை குறைக்க முடியும். இங்கே நாம சொல்வது பண சிக்கனம் மட்டு அல்ல பொருள் சிக்கனம், மின் சிக்கனம்,நீர் சிக்கனம், உணவு சிக்கனம் (தேவையான அளவு சமைத்தல்) என்று பல உள்ளது. சொல் சிக்கனம் சிலசமயம் நம்மை பல நிலைகளில் இருந்து காப்பாற்றும்.

நம் அன்றாட வாழ்வில் பல இடங்களில் சேமிப்பை கண்டு அல்லது சேமிப்பில்தான் வாழ்ந்து இருக்கின்றோம். சேமிப்பு என்பது உண்டியலில் சிறுக சேமிப்பது முதல் அஞ்சல் நிலைய சிறு சேமிப்பு வங்கி நிலை சேமிப்பு பொன் சேமிப்பு அணைகள் நீர் தேக்கங்கள் உணவு கிடங்கு நுகர்வோரை வாடிக்கையளர் ஆக்குவது என்று வன்தகட்டில் கோப்புகளை பாதுகாத்து சேமித்து வைப்பது வரை சேமிப்பின் நீளம் அல்லது தேவை இவ்வாறாக வாழ்வின் எல்லா பகுதிகளிலும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

Related Posts

error: Content is protected !!