இளையராஜா இசையில் புதுமுகங்கள் நடிக்கும் “ஒரு ஊர்ல” -ஆல்பம்

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர்.கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது,”
கெட்டவன் மாதிரி இருக்கும் நல்லவன் வெங்கடேஷ் ! நல்லவன் மாதிரி இருக்கிற கெட்டவன் இந்திரஜித் உட்பட பதினான்கு விதமான கதாபாத்திரங்களின் கிராமத்து யதார்த்த வாழ்க்கை தான் ‘ஒரு ஊர்ல”

படத்தில் வரும் ஒரு இரும்புக்கடையின் பிரம்மாண்டத்தை யாரும் இதுவரை திரையில் பார்த்திருக்க முடியாது.முழு படத்தையும் பார்த்து விட்டு இளையராஜா சார் பாடல்களை கம்போஸ் செய்தார்.அது மாதிரி இசையமைத்த பாடல்களும் படங்களும் வெற்றி பெற்றிருப்பது இதுவரை நடந்த நிஜம் ! ஐந்து பாடல்களில் கிராமத்து நேடிவிடி இருக்கும்.

இந்த படத்தில் இடம் பெரும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி பதினெட்டு நாட்கள் படமாக்கப்பட்டது. ஈ , காக்கா கூட பறக்க முடியாத 250 ஏக்கர் பொட்டல் காடு மருந்துக்கு கூட ஒரு மரம் கிடையாது அங்கு பதினெட்டு நாட்கள் படப்பிடிப்பு என்றால் யோசித்துப் பாருங்கள்” என்றார் இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார்.