இளையராஜாவுக்கு விஜய் டிவி நடத்தும் விழா ! பின்னணி என்ன?

இளையராஜாவுக்கு விஜய் டிவி நடத்தும் விழா ! பின்னணி என்ன?

1976-ஆம் ஆண்டு “அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுக மான இளையராஜாவுக்கு, அண்மையில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த “தாரை தப் பட்டை’ ஆயிரமாவது படமாக அமைந்தது. இதை யொட்டி தாரை தப்பட்டை படக்குழுவினர் இளைய ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர். அப்போது, சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் இந்த விழாவை திட்டமிட்டப்படி நடத்தமுடியவில்லை.
ilayaraja feb 6
இந்த நிலையில், சென்னையில் வரும் 27-ஆம் தேதி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப் பட வுள்ளது. இந்த விழாவை இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் தொலைக்காட்சி நடத்துகிறது. இதையொட்டி விஜய் டி வி பெருந்தொகை அட்வான்ஸ் கொடுத்துள்ளதுடன் அந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் முழு வருமானத்தையும் ராஜாவுக்கே தந்து விடுவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறதாம் இதையடுத்து பிரம்மாண்டமான முறையில் நடக்கவுள்ள பாராட்டு விழாவில், இந்திய அளவிலான திரை பிரபலங்கள், இசைக் கலைஞர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள், தமிழ்த் திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே இவ்விழா குறித்து இளையராஜா, “ஆயிரம் படங்களுக்கு இசை, என்னை பொறுத்தவரையில் ஒரு எண்ணிக்கையே. இதை வைத்து நான் கர்வப்பட முடியாது.இசை என்னுடைய வாழ்வு, என்னுடைய மூச்சு. என்னுடைய இசை ஒவ்வொரு ரசிகனுடைய வாழ்விலும் ஒரு அன்யோன்யத்தை ஏற்படுத்தி யுள்ளது மகிழ்ச்சியே. என்னுடைய ரசிகர்களின் கைதட்டல் தான் எனக்கு பாராட்டு. அது தான் என்னுடைய வாழ்வின் அர்த்தமாகவும் கருதுகிறேன்.என் இசைக்கு பாராட்டு என்ற போது, எனக்கு அந்த இசை கொடுத்த என் இறைவனுக்கு பாராட்டாக இருக்கும் என்று தான் இந்த வாழ்வில் நான் கலந்து கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

error: Content is protected !!