இளம் பெண்கள் பாதுகாப்புக்கு இலவச மிளகு ஸ்பிரே! டெல்லி போலீஸ் வழங்குகிறது

இளம் பெண்கள் பாதுகாப்புக்கு இலவச மிளகு ஸ்பிரே! டெல்லி போலீஸ் வழங்குகிறது

டெல்லியில் கடந்த 2 வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது.இதை தொடர்ந்து டெல்லி போலீசார் பெண்கள் பாதுகாப்புக்காக மிளகு ஸ்பிரே கேன் வழங்க நடவடிக்கை எடுத்து அதன்படி முதலில் 1000 மிளகு ஸ்பிரே கேன்கள் பெண் பத்திரிகையாளர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இளம் பெண்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் பெண்கள் தங்களுக்கு மிளகு ஸ்பிரே கேன்கள் வேண்டும் என்றால் 2 பாஸ்போர்ட் போட்டாவுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
delhi peper
வடக்கு டெல்லியில் கடந்த 5-ந் தேதியன்று உபேர் கால் டாக்சி டிரைவரால் 27 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் டெல்லியில் 4 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர கடத்தல்காரர்களால் இளம்பெண்கள் கடத்தப்படுவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக நாளொன்றுக்கு சுமார் 40 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் அதில் 4 வழக்குகள் கற்ப்ழிப்பு வழக்குகள் என்று அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. அதுவும் டெல்லி புறநகர், வடகிழக்கு மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய பகுதிகளில் அதிக கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடத்தில் கடந்த நவம்பர் 15 வரை 1,686 பேர் பாலியல் பலாத்காரத்திற்கும், 3,589 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை குற்ற விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையேதான் இளம்பெண்கள் தங்களைப் பாதுக்காத்துக் கொள்ள மிளகு ஸ்பிரேயை இலவசமாக வழங்க டெல்லி போலீஸ் முடிவு செய்திருக்கிறது

error: Content is protected !!