இளம்பெண்களின் மாரடைப்புக்கு காரணம் வாழ்க்கை முறையே: ஆய்வில் தகவல்!

இளம்பெண்களின் மாரடைப்புக்கு காரணம் வாழ்க்கை முறையே: ஆய்வில்  தகவல்!

முன்னர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வந்த மாரடைப்பு நோய், தற்போதைய அவசர கதியிலான வாழ்க்கை முறையால் உண்டாகும் மன, உடல் பாதிப்புகள் காரணமாக இளம் வயதினருக்கும் வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம்பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இளம்பெண்களின் 75 சதவீத மாரடைப்பு நோய்க்கு தவறான வாழ்க்கை முறை தான் முக்கிய காரணம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
heart-attack-women-6
இளம் வயதில் இதய நோயால் பாதிக்கப்படும் நான்கில் மூன்று பெண்கள் ஆறு வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றியிருந்தால் இதய நோயை தவிர்த்திருக்கலாம் என்று அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆறு வாழ்க்கை முறைகள்-

புகை பிடிக்காமல் இருப்பது.

ஆரோக்கியமான எடையை பராமரிப்பது.

வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வது வாரத்தில் ஏழு மணி நேரத்திற்கு மேல் டி.வி பார்க்காமல் இருப்பது.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு முறை மது அருந்துவது.

ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பது.

இதோடு இன்னொரு கூடுதல் விதியும் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே டி.வி பார்க்க வேண்டும். காரணம் ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அதிக நேரம் டி.வி பார்ப்பவர்கள் சிறு வயதில் இறந்து போவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளது.

இந்த ஆறு வழிமுறைகளை தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 92 சதவீதம் குறைவதாகவும், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 66 சதவீதம் குறைவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமும் மிதமான அளவு மது அருந்தும் பெண்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்கள் மற்றும் மதுவே அருந்தாதவர்களை விட நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.

இது ஒரு முக்கியமான பொது சுகாதார செய்தி என்று குறிப்பிட்ட இண்டியானா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் சோமிஸ்டிக், பெண்கள் இந்த வழிமுறைகளை தங்கள் இளைய வயதிலேயே தொடங்க வேண்டுமென்றும் இது எதிர்காலத்தில் இதய நோய்களை தடுப்பதற்கான எளிய வழி என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!