இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம்! By கிருத்திகாதரன்

இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம்! By கிருத்திகாதரன்

சமீபகாலமாக ம்மா நான் பேஸ்புக் அக்கவுன்ட் ஆரம்பிக்க போறேன்”, அம்மா இப்ப எங்க கிளாஸ்ல எல்லாருக்கும் பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கு, அப்படின்னு காலேஜ் பசங்க இல்லை பத்து வயசு பள்ளிக்கூட பசங்க கூட சொல்றது சகஜமா ஆயிடுச்சு..

உலகெங்கும் சமூக வலைத்தளங்கள் தற்பொழுது சக்கை போடு போடுகின்றன. அதற்கான பல உளவியல் காரணங்கள் உள்ளன. ஆனால் அதை பயன்படுத்தும் விதம்தான் இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம் என்று எண்ணம் கொள்ள செய்கிறது.
19 - facebook risk
இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் -இரு பன்னிரண்டு வயது மற்றும் பதினான்கு வயது சிறுமிகள். ஒரு தற்கொலை. காரணம் கிண்டலும் கேலியும். மூன்று பேரும் ஒரு பள்ளியில் படிக்கும்பொழுது பள்ளியில் தோழமைகள் மூலமாக பிரச்சனை வந்து இருக்கிறது. இதில் இரு சிறுமிகள் குறி வைத்தது ரெபக்கா என்ற பன்னிரண்டு வயது சிறு பெண்ணை.

இன்னும் கொஞ்சம் விரிவாக் சொல்வதென்றால் இந்த ரெபேக்கா பழைய பள்ளியை விட்டு விலகி புது பள்ளியில் சேர்ந்து இருக்கிறாள். ஆனால் பழைய பள்ளி தோழிகள் பேஸ்புக் அக்கவுன்ட்- ல் தோழமைகளாக தொடர்ந்து இருகின்றனர். இந்நிலையில் அங்கு இந்த இரு பெண்களும் ரெபேக்காவை நீ அழகு இல்லை, அறிவு இல்லை..என்று தொடர்ந்து கிண்டலும் கேலியும் செய்து ஸ்டேடஸ்களும், மெசெஜ்களும் அனுப்பி இருகின்றனர். இந்த பெண்ணும் முடிந்த வரை தாங்கி இருக்கிறாள்.

இதன் பின்னணியில் இவர்களின் ஆண் நண்பன் ரெபெக்காவிடம் நெருங்கிய தோழமையாக இருப்பது பிடிக்காமல் பொறாமையில் கிண்டல், கேலிகள், எது செய்தாலும் பின் தொடர்ந்து காலை வாருவது என்று பேஸ்புக்கில் செயல் பட்டுள்ளனர். இதன் உச்ச பட்சமாக “Drink bleach or die” என்பது போன்ற வார்த்தைகளை அவளை நோக்கி தாக்கி உள்ளனர். நீயே தற்கொலை செய்து கொள், இந்த உலகில் வாழ அருகதை இல்லாதவள் போன்ற வார்த்தைகள் இந்த சிறு பெண்ணை மிகுந்த மன உளைச்சலுக்கு கொண்டு சென்று விட்டது.

இதில் அப்செட்டான ரெபேக்கா டென்ஷனாகி கடைசியாக தேடியது ப்ளேடுகளை அந்த ஊர் ரேசர்களில் இருந்து எப்படி பிரித்து எடுப்பது, தூக்க மாத்திரைகள் எங்கு கிடைக்கும் போன்று தற்கொலை செய்து கொள்ள வழிகளை தேடி இருக்கிறாள். முடிவில் தற்கொலை செய்து கொண்ட அந்த குழந்தை கிண்டல், கேலிகளுக்குதான் பலியானாள்.

பின்னரும் -அதாவது இச்சிறுமி மாண்ட பிறக்கும் உட்சபட்சமாக “Yes IK I bullied REBECCA nd she killed her self but IDGAF,” என்று அந்த கிண்டல் செய்த பெண் போஸ்ட் போட்டு இருந்தாள். அந்த ஸ்டேடஸ்தான் அவளை காட்டி கொடுத்தது. “ஆமாம், நான்தான் கேலி செய்து வம்புக்கு இழுத்தேன், அவள் தற்கொலை செய்துகொண்டாள், அதை பற்றி எனக்கு கவலையும் இல்லை” என்று கெட்ட வார்த்தையில் முடித்து இருந்தாள். இப்படி ஒரு இறப்புக்கு கூட அஞ்சாத,இரக்கம் காட்டாத அந்த குணம் ஒரு சிறுமியிடம் கண்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருக்கின்றனர்.

தற்போது இது வெளிநாட்டில்தான் நடகிறது:நம்மூரில் இதெல்லாம் இல்லை என்று தாண்டி போக முடியாததாகதான் இன்று வலை உலகம் தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து வைத்து இருக்கிறது. இங்கே =திருச்சியில் புகழ்பெற்ற கல்லூரியில் கண்பெஷன் எனப்படும் பாவமன்னிப்பு பேஸ்புக் பேஜ் ல் ஒரு பெண் போட்டு இருந்த போஸ்ட் ஒரு அதிர்ச்சி. அவள் முன்னாள் காதலனுடன் சேர்ந்து இருக்கும் பெண் தோழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ பாயிசன் ஐ அந்த பெண்ணின் உணவில் சேர்த்து இருக்கிறாள். அவள் வாந்தி, தலைவலியால் தவிப்பதை பார்த்து மனசுக்குள் சந்தோஷ பட்டதை போஸ்ட் போட்டு சொல்லி இருக்கிறாள். ஆம் நான்தான் அது என்றும் கூறி இருக்கிறாள்.

ரெபேக்கா விஷயத்தில் கிண்டல் செய்த பெண்ணின் குணம் நேரடியாகவும் அப்படி உள்ளதாக பக்கத்து வீட்டுகாரர் தெரிவித்து கொள்கிறார். நேரடி கண்காணிப்பு செய்யாத பெற்றோரும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளனர். எது எப்படியோ இப்போது ஒரு பெண்ணை இழந்து ஒரு குடும்பம் தவிக்கிறது. இதையடுத்து இரு சிறுமிகளை சிறைக்கு அனுப்பி சொல்ல முடியாத வேதனைகளை இரு குடும்பங்கள் அனுபவிக்கிறது.

எந்த புரட்சியிலும் நல்லது, கெட்டது சேர்ந்தே நடக்கிறது. தகவல் தொழில் நுட்ப புரட்சி நமக்கு பெரிய வர ப்ரசாதம். அதை சரியாக உப்யோகிக்கவிட்டால் நம்மையே கொல்லும் இருபக்க கூர்மை உடைய கத்தி. குழந்தைகளுக்கு வெளி உலகை எதிர்கொள்ள கற்றுகொடுப்பதும் அவசியம் ஆகிறது. எப்படி கற்று கொடுக்க போகிறோம் ,கற்று கொள்ள போகிறோம் என்பது புரியாத புதிராகதான் உள்ளது.

கிருத்திகாதரன்

error: Content is protected !!