“இப்ப என்ன சொல்லுவீங்க ..இப்ப என்ன சொல்லுவீங்க” – ‘ பிச்சைக்காரன்’ விஜய் ஆண்டனி விளக்கம் ஸ்டில்ஸ்

“இப்ப என்ன சொல்லுவீங்க ..இப்ப என்ன சொல்லுவீங்க”  – ‘ பிச்சைக்காரன்’  விஜய் ஆண்டனி விளக்கம் ஸ்டில்ஸ்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் வரி களுக்கு சமூக சமத்துவக்கான மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது . அச்சங்கத் தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “`பிச்சைக்காரன்’ என்ற படத்துக்கான விளம்பரப் பாடல் ஒன்று இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியைப் பயின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன, பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவுபடுத்தும் வகையில் அதன் பாடல் வரிகள் அமைந்துள்ளன.


`கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்

தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்’

என்ற பாடல் வரிகள், மிகவும் மோசமாக, இட ஒதுக்கீடூ மூலம் படித்த டாக்டர்களைச் சித்தரிக்கிறது. அந்த டாக்டர்கள் தப்பு தப்பா ஊசிப்போட்டு நோயாளிகளை கொல்லுகிறார்கள் என்பது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, விஷமத்தனமானது. இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. இடஒதுக்கீடு, தகுதி – திறமையைப் பாதித்து விடுகிறது என்ற தவறான, உளுத்துப் போன வாதத்தை மீண்டும் மீண்டும் முன் வைக்கும் முயற்சியாகும்”அந்த வரிகளை நீக்கும்படி வற்புறுத்தி இருந்தது

இதற்கு விஜய் ஆண்டனி விடுத்துள்ள அறிக்கையில், “‘பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு’ என்ற சமூக விழிப்புணர்வு பாடலை ‘பிச்சைக்காரன்’ படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார். அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித்தகுதி இல்லாத சிலர் தன் பண பலத்தை உபயோகித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சத்தையும், கோடிகளையும் கொடுத்து மருத்துவர்களாகி நல்ல மருத்துவ சமுதயாத்துக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள் என்பதைத்தான் ‘கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்’ என்று பாடலாசிரியர் லோகன் குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் அந்த பாடலை எழுத வில்லை.இன்னும் சொல்ல போனால், கவிஞர் லோகனும், பாடலை பாடிய வேல்முருகனும் பிற் படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் தான். ஒரு வரியை வைத்து எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம். இந்த பாடலை முழுமையாக கேட்டால் தான், இப்பாடல் எழுதப் பட்ட நோக்கம் என்ன, அது யாருக்காக எழுதப்பட்டது என்பது உங்களுக்கு புரியும். இந்த பாடல் மூலம், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத்த்தான் எடுத்து சொல்கிறோமே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என்று என்னுடைய முந்தைய படமான ‘சலீம்’-ல் வாழ்ந்து காட்டியவன் நான். சமூகத்தின் மேல் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மேல் மிகுந்த அக்கறை எனக்கும் உண்டு.பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், ‘கோட்டா’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ‘காசு கொடுத்து’ என மாற்றி விட்டோம் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.பாடலாசிரியர் லோகன் எழுதிய பாடல் வரிகள் சிலரை புண்படுத்தி இருந்தால், அதற்கு என் ‘பிச்சைக்காரன்’ படக்குழுவின் சார்பாக நான் விளக்கமளிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

error: Content is protected !!