இப்படியும் ஒரு பேஸ் புக் தாய்!

இப்படியும் ஒரு பேஸ் புக் தாய்!

உ.பி. ஸ்டேட் கோரக்பூரை சேர்ந்தவர் கிருஷ்ண மோகன் பாரதி. 28 வயசு நிரம்பிய திரிபாதி 4 வருச கங்களுக்கு முன் பேஸ்புக் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டேப் மில்லர் என்பவரு டன் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.அந்த டெப் மில்லர் 60 வயது நிரம்பியவர்.இவருக்கு குழந்தை இல்லை.
cali jan 31
இதற்கிடையே திரிபாதியின் தாயார் மரணம் அடைந்தார். தாயின் மறைவு குறித்து திரிபாதி தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த சமயத்தில் திரிபாதிக்கு டெப் மில்லர் அறுதல் அளித்தத்தோடு,”உனக்கு தாயாக நான் இருக்கிறேன் கவலைப்படாதே” என்று பரிவுடன் கூறியிருக்கிறார். அதோடு திரிபாதியை தனது மகனாகவே பாவிப்பதாகவும் டெப் மில்லர் அவரிடம் கூறியிருக்கிறா£ர்.

இந்நிலையில் திரிபாதிக்கு திருமணம் முடிவானது. தனது திருமணம் குறித்து திரிபாதி அமெரிக்காவில் வசிக்கும் தனது வளர்ப்புத் தாயிடம் தெரிவித்திருக்கிறார். திருமணத்துக்கு வருவதாக அவரிடம் டெப் மில்லர் வாக்களித்துள்ளார். ஆனால் இதனை திரிபாதி நம்பவில்லை.கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஒருநாள் டெப் மில்லரிடம் இருந்து போன், நான் இந்தியாவில் எங்கே இறங்க வேண்டும் எங்கே வர வேண்டுமென விசாரிப்புகள். அதற்கு பிறகுதான் திரிபாதிக்கு உரைக்கத் தொடங்கியுள்ளது. பின்னர் டெல்லியில் இறங்கி கோரக்பூருக்கு ரயில் பிடித்து டெப் மில்லர் திருமண வீட்டை அடைந்தார்.

பேஸ்புக் பழக்கத்திற்காக ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருந்து ஒரு பெண் இந்தியா வந்தது… திருமண வீட்டில் இருந்தவர்களை நெகிழச் செய்தது. இந்த திருமணத்தில் டெப் மில்லர், பனராஸ் பட்டுப்புடவை அணிந்து பங்கேற்றார்.புதுமணத் தம்பதிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள மோதிரங்களை அணிவித்து மகிழ்ந்தார். புதுமணத் தம்பதிகளை அமெரிக்கா வருமாறு அழைத்து விடுத்தார். திருமணம் முடிந்த பின் நேற்று அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.இப்படியும் ஒரு நட்பூ !

error: Content is protected !!