இன்றைய கூகுள் டூடுளில் இடம் பெற்ற பெண்மணி பற்றி சிறு குறிப்பு:

இன்றைய கூகுள் டூடுளில் இடம் பெற்ற பெண்மணி பற்றி சிறு குறிப்பு:

நடிகை என்றால், அறிவாளியாய் இருக்கக் கூடாது அல்லது இருக்க மாட்டார் என்று நம் மக்களின் நம்பிக்கை.. ஆனால் இப்போது கம்ப்யூட்டர், டேப்லட், ஆன்ட்ராய்ட் போன் என்று எதுவாக இருந்தாலும் சரி. உங்களால் இப்போது இந்த செய்தியைப் படிக்க முடிவதற்குக் காரணம் ஒரு நடிகைதான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? கொஞ்சம் கஷ்டப்பட்டாவது நம்பி விடுங்கள். ஏனென்றால் அதுதான் உண்மை…
lady nov 9
ஆம் முன்னாள் நடிகை மற்றும் விஞ்ஞானி ஒருவரின் கண்டுபிடிப்பு தான் நாம் இப்போது பயன் படுத்தும் blue tooth, WiFi மற்றும் CMDA ஆகிய நுட்பத்தின் அடிப்படை என்றால் ஆச்சர்யம் தானே. ஐரோப்பாவின் அழகிய பெண் என்று வர்ணிக்கப்பட்ட ஹெட்டி லாமர் (Hedy Lamarr) தான் அவர். அவரின் frequency-hopping idea என்கிற கண்டுபிடிப்பு தான் இப்போது spread-spectrum communication technologyயின் ஆரம்பம்.

1913-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர், 1930-களில் ஐரோப்பிய சினிமாவில் அறிமுக மாகி, பின்பு ஹாலி வுட்டிலும் பிரபலமானார். மிகவும் கவர்ச்சியாய் நடித்து எதிர்ப்பும் அதே சமயம் வரவேற்பும் பெற்ற இவர், “woman of the Science” என்றும் கொண்டாடப்பட்டார்.

இன்றும் இவரது அறக்கட்டளை இருக்கிறது.

அவரைப் பற்றி கூகுள் டூடுள் வீடியோ ரிப்போர்ட் இதோ:


மேலும் அறிந்து கொள்ள  அவரின் இணையத் தள லிங்க் கீழே

http://www.hedylamarr.com

error: Content is protected !!