இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா?

இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா?

வரும் 2016ம் ஆண்டில் அரசியலிலிருந்து ஓய்வு பெற காங்கிரஸ் தலைவர் சோனியா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தனது உடல்நிலையும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப் படுகிறது. இதனை கணக்கில் கொண்டே ராகுல் காங்கிரஸ் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
9 -sonia-gandhi.
2016ம் ஆண்டு சோனியாவுக்கு 70 வயதாகிறது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பிரபல பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் எழுதிய 24 அக்பர் சாலை என்ற புத்தகத்தில் சோனியாவின் முடிவு குறித்து கூறப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போதே, தனது ஓய்வு முடிவு குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் சோனியா கூறியதாகவும், இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ராகுலை தலைவராக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரியங்காவையும் தீவிர அரசியலுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை சோனியா தற்போது எடுத்து உள்ளதாகவும். சோனியாவின் திடீர் உடல் நலக் குறைவே இசசூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்பட்சத்தில் ராகுல், பிரியங்கா இருவரிடமும் ஆட்சி பொறுப்பையும், கட்சி பொறுப்பையும் சோனியா ஒப்படைத்து விடுவார் எனவும் உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட் சோனியா காந்தி 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் ரேபரலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடலாம் என்றும் கூறப் படுகிறது.

Sonia Gandhi wants to retire in 2016, says book

*******************************************************
Congress president Sonia Gandhi wants to retire when she turns 70 in 2016 and this is what has prompted the party to give a ‘bigger role’ to her son Rahul Gandhi, says a book.In an updated version of his book “24 Akbar Road” (Hachette India), journalist-writer Rasheed Kidwai says the Congress has been rattled by the senior Gandhi’s decision.

error: Content is protected !!