’இனிமே இப்படித்தான்’- ஏன்?எப்படி?இப்படி? சந்தானம் விளக்கம்

’இனிமே இப்படித்தான்’- ஏன்?எப்படி?இப்படி? சந்தானம் விளக்கம்

முன்னாள் காம்பியர், நேற்றைய காமெடியன் இனி ஹீரோ என்று முடிவெடுத்து விட்ட சந்தானம் தயாரிப்பு, நடிப்பில் வெளி வர இருக்கும் ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
inemey ippadi santhanam 1
நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், “இப்ப இருக்கிற சூழ்நிலையில ஒரு படத்தைப் பண்றது ஈஸி, ஆனால், அந்தப் படத்தை ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு இப்ப நான் தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு தேதி பிடிக்கிறதுல இருந்து டைட்டில் பிடிக்கிறது வரைக்கும் பிரச்சனைதான். நிலம் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணுறாங்களோ இல்லையோ படத்தோட டைட்டில் மட்டும் சீக்கிரமா ரிஜிஸ்டர் பண்ணிடுறாங்க. எந்த தலைப்பைச் சொன்னாலும் அது தயாரிப்பாளர் சங்கத்துல பதிவு பண்ண பெயரா இருக்கு. சும்மா, ‘நீ ஏண்டா என்னைக் கூப்பிட்ட’ அப்படின்னு கேட்டால் அந்தப் பெயரைக் கூட ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்காங்க. அப்படி டைட்டில் வைக்கிறதுல இருந்து படத்தை ரிலீஸ் செய்யற வரைக்கும் ரொம்ப ரொம்ப போராட வேண்டியிருக்கு.

இந்த வாழ்க்கையில வேகமா முன்னேறனும்னா மெதுவா அதற்கான வேலையை செய்யனும். அப்படி மெதுவா தான் இந்த கதையை நாங்க உருவாக்குனோம். அதுக்குனு அவதார், ஜுராசிக் வேர்ல்டுனு நினைக்க வேண்டாம். இயல்பான காமெடிக்கு முக்கியத்துவமான படம் அவ்வளவு தான்.இந்தப் படத்தோட இயக்குனர்கள் முருகானந்த் தான் என்னோட பலம். நான் இதுக்கு முன்னாடி பல படங்கள்ல பேசுன நகைச்சுவைகளுக்கும் அவங்கதான் காரணம். இந்தப் படத்தைப் பேசிப் பேசிதான் படத்துக்கான ‘லைன்’ பிடிச்சோம்.ஒரு அழகான காதல், யதார்த்தமான, நகைச்சுவை கலந்த படம். கடைசியில சின்ன ஒரு மெசேஜ் இருக்கும். எல்லாருக்குமே பிடிக்கிற மாதிரியான படமா இந்தப் படத்தை உருவாக்கியிருக்கோம்,” என சந்தானம் பேசினார்.

இதன் பின்னர் நிருபர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், “இனிமேல் காமெடியனாக நடிக்கப்போவதில்லை என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஹீரோ கூட நடிக்கும்போது காமெடி காட்சிகளில் நமக்கு சுதந்திரம் தரும் ஹீரோக்களுடன் நடிக்கவே நான் விரும்புகிறேன், பெரிய ஹீரோவுடன் இணைந்து காமெடி செய்யும்போது ஹீரோவோட இமேஜை டேமேஜ் செய்யாம நம்மால நடிக்க முடியாது அதனாலதான் என்னுடைய நண்பர்கள் லிஸ்டில் சிம்பு, ஆர்யா, உதயநிதி, ஜீவா எப்பவுமே முதல் இடத்துல இருக்காங்க. இவங்க என்னுடைய காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எனக்கு வேலை சுதந்திரம் தருவாங்க..”என்றார்.

https://www.youtube.com/watch?v=minY-TO2358

Related Posts

error: Content is protected !!