இனிமேல் மொபைலை கூட ஏடிஎம் கார்டாக உபயோகபடுத்தலாமே!.

இனிமேல் மொபைலை கூட ஏடிஎம் கார்டாக உபயோகபடுத்தலாமே!.

ATMIA என்னும் இந்தியன் ஏடிஎம் அசோஷியேஷன் வின்டோஸ் 10 என்னும் மைக்ரோசாஃப்ட்டின் அதி எதிர்ப்பு வாய்ந்த மென்பொருளை உபயோகபடுத்த அனுமதி வாங்கி விட்ட்டார்கள்.இதன் மூலம் இன்னும் விரைவான ஏடிஎம் சேவை மட்டும் இல்லாமல் நம்மின் மொபைலை கூட ஏடிஎம் கார்டாக உபயோகபடுத்தலாம்.அத்துடன் வயர்லெஸ் மூலம் ஏடிஎம் வழியே முழு பேங்க் ஸ்டேமென்ட்ஸ் மற்றும் பல இன்டராக்டிவ் முறையில் பயன்படுத்த முடியுமாம்.
ravi 10
நம்ம இந்தியாவில் மிக அதிகமாக ஏடிஎம்கள் பழுதான காரணம் பல ஆண்டுகளாய் பயன்படுத்திய எக்ஸ் பி என்னும் மென்பொருள் மற்றும் சமீப கால வின்டோஸ் 7 என்னும் மென்பொருள்தான். இந்த இரண்டுமே அவ்வளவாய் பிரகாசிக்காதது மட்டுமின்றி இதன் பெர்ஃபார்மென்ஸ் ஒரு ஏடிஎம்மை 60 – 70% மட்டும் தான் தருகிறது என்பதால்தான் ATMIA வின்டோஸ் 10 -ஐ முடிவு செய்து ஆர் பி ஐ அப்ரூவும் செய்திருக்கிறதாம்.

இந்த வகை ஏடிஎம்களை பணம் எடுக்க சிலர் பயன்படுத்தினாலும் சிலர் டிரான்ஸஃபர் / பேலன்ஸ் செக் செய்ய / செக்புக் ரெக்வுஸ்ட் என நான் ஃபைனான்ஸியல் டிரான்ஸாக்ஷன்ஸ் செய்வதால் ஏடிஎம்மின் பயன்பாடு பணம் பட்டுவாடா செய்ய காத்திருக்கும் ஆட்களை எரிச்சல் அடைய செய்திருக்கலாம். ஆனா இனிமேல் ஏடிஎம்மும் அதற்க்கு பக்கத்தில் வெறும் டிரான்ஸாக்ஸுக்கும் ஏடிஎம்மை பயன்படுத்தலாம். இந்த வின்டோஸ்10 மூலம் என கூறியிருப்பதால் அதுவும் சாத்தியமே.

ஹும் இனிமே என்னை மாதிரி மினிமம் பேலன்ஸ் கூடா வைக்காம 40 ரூபா சொச்சம் வச்சிகிட்டு பணம் எடுக்கர மாதிரி ஆக்டு கொடுத்து ஏசி காத்துல அடிக்கடி பிரஷ் ஆக்கிகிட்டு தூன்னு ஏடிம் பேலன்ஸ் இல்லைடா வெங்காயம்னு துப்பும் வெள்ளை பேப்பரோடு வெளியே வந்து அந்த செக்யூரிட்டிகிட்ட ஒரு வழி வழிஞ்சிட்டு இனிமே போக முடியாது போல…………….என்னமோ போடா மாதவா……

indian ATM’s are going to be more advanced than other countries

error: Content is protected !!