இந்த ₹ 20 லட்சம் கோடி ஸ்டிமுலஸ் பேக்கேஜ் வீணா?

இந்த ₹ 20 லட்சம் கோடி ஸ்டிமுலஸ் பேக்கேஜ் வீணா?
பாஜகவுக்கு முட்டுக் கொடுக்காமல் 20 லட்சம் கோடி அறிவிப்பில் என் கருத்து:
1. MSME வரையறையை குறைத்ததின் மூலம் ₹2 கோடி முதலீட்டாளரையும், ₹2 லட்சம் முதலீட்டாளரையும் ஒரே தராசில் வைத்தது சரியல்ல!
2. கடன்கள் கேரண்டி இல்லாமல் கொலேட்டிரல் இல்லாமல் 45 நாட்களில் கடன் கொடுக்கச் சொல்வது மிக அதிகமான காலம். ஒற்றை சாளர முறையில் ஒரே வாரத்தில் கிடைக்குமாறு செய்திருக்க வேண்டும்.
3. கடன்களுக்கு மார்ஜின் பணம் தேவையா இல்லையா என்பது தெளிவாக இல்லை.
4. கடன்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தராத வஙகிகளுக்கு என்ன தண்டனை என்பதும் இல்லை.
5. ‘நான் பணத்துக்கு கேரண்டி, நீ பணம் கொடு’ என்று அரசு கூறுவது அதிகப்படியான NPA விற்கு வழி வகுக்கும்!. NPA வை write off செய்வார்கள் இல்லை கடன் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிப்பார்களா எனத் தெரியவில்லை.
6. யார் யாருக்குக் கடன் என்பதில் வரையறை சரியில்லை. ஏற்கனவே பணம் கட்ட முடியாமல் கம்பெனியைப் பூட்டியவர்களுக்கும் கடன் என்பது மடமை.
7. 10% பேக்கேஜ் மத்திய மற்றும் BPL குடிமக்களை டார்கெட் செய்யப்பட்டது குறித்து கருத்து ஏதுமில்லை. அது அவசியம்தான்.
8. இறக்குமதியைக் குறைக்கும் வழிகளைச் சொல்லவில்லை. இம்போர்ட் சப்ஸ்டிடூட் (Import Substitute) பொருள்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிக்கும் எந்த இன்சென்டிவும் இல்லை… இதையும் ‘மேக் இன் இந்தியா’வில் சேர்ப்பதால் பலனில்லை. உதாரணம், PPE, ventilator, corona medicines, disposable masks, செய்பவர்கள் ஏற்றுமதி செய்தால் அவர்களுக்கு ஊக்கத் திட்டம் என்பது போல எதுவும் இல்லை.
9. இரண்டு மாதமாக கஜானா காலியாக உள்ள நிலையில் இதையெல்லாம் எங்கிருந்து தொடங்குவார்கள் என்றும் தெரியவில்லை… சைக்ளிங் அண்ட் ரொடேஷன் ஆஃப் டேக்சஸ் என்றால் கையிருப்பையோ, கடன் வாங்குவதையோ வெளிப்படையாக சொல்லி இருக்கலாம்…
10. மொத்தத்தில் இந்த ₹ 20 லட்சம் கோடி ஸ்டிமுலஸ் பேக்கேஜ் வீணா என்று கேட்டால்…… என் பதில்…
இல்லை….. நிச்சயம் இல்லை…
காரணம், மேற்கூறிய கேள்விகளுக்கு சரியான பதிலையும், நடவடிக்கைகளும் எடுத்தால் இந்தத் திட்டம் பொருளாதார சரித்திரத்தில் இடம் பிடிக்கும் என்பது என் கருத்து!…
இது அரசியல் பதிவல்ல! பொருளாதாரப் பதிவு…. இந்த விஷயத்தில் யாரும் அரசுக்கு முட்டுக் கொடுக்காமல் பதில் சொல்லுங்கள்… முட்டுக் கொடுக்க வேண்டுமானால் என்னை விட சிறந்த மோடி ஆதரவாளர் கிடையாது!…
உண்மையைத் தெளிவோம்!…
error: Content is protected !!