இந்திய விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஆராய்ச்சி விருது!

இந்திய விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஆராய்ச்சி விருது!

அமெரிக்காவின் கன்சஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் ‘மெக்கானிக்கல்-நியூக்ளியர் என்ஜினியரிங்’ புரொபசராக பணிபுரிந்து வருபவர் குர்பீத் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ‘ரீசார்ஜபிள் பேட்டரி’களை எளிமையாக வடிவமைக்க உதவும் அல்ட்ரா தின் மெட்டல் ஷீட்டுகளை உருவாக்கியிருக்கிறார். இவரது இந்த கண்டுபிடிப்பை சூப்பர் கெபாஸிட்டர்கள், பெட்ரோ-கெமிக்கல் ஹைட்ரஜன் உற்பத்தியிலும் பயன்படுத்த முடியும்.
nsf 1
அவரது ஆராய்ச்சியை பாராட்டி அமெரிக்காவின் மிக முக்கிய அறிவியல் விருதாக கருதப்படும் ‘நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் கேரியர்’ விருதை குர்பீத் சிங்கிற்கு வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருது 5 லட்சம் டாலர்கள் மதிப்புடையது.

இந்த விருதின் மூலம் மேலும் அவர் ஆராய்ச்சியை தொடரவும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நானோ டெக்னாலஜி சார்ந்த கருத்தரங்குகளை நடத்தவும் முடியும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!