இந்திய ராணுவ போலீஸில் பெண்கள்!

இந்திய ராணுவ போலீஸில் பெண்கள்!

பெண்களை ராணுவ போலீஸ் பிரிவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி அஷ்வானி குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் மருத்துவம், கல்வி, பொறியியல் மற்றும் சட்டம் போன்ற பல துறைகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் ராணுவப் போலீஸ் துறையில் பெண்கள் சேர்க்கப்படவில்லை என்று கடந்த ஜூன் மாதம் ராணுவத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் ஒர் நேர்காணலில் கூறியிருந்தார். மேலும், பெண்களை ராணுவ போலீஸ் பணியில் பணியாமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 800 மகளிரை அடுத்த 5 வருடங்களில் பணியமர்த்த உள்ளதாகவும் வருடத்திற்கு 52 பெண்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி அஷ்வானி குமார் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை ஈடுபடுத்த முடிவு எடுத்ததாக தலைமை அதிகாரி அஷ்வானி குமார் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் போலீசின் பங்களிப்பு ராணுவ விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறுவதை தடுக்கவும், அமைதி மற்றும் போரின் போது உபகரணங்களை வழங்குதல், அதனை பராமரித்தல், போர் கைதிகளை கையாள்வது மற்றும் சிவில் போலீசிற்கு உதவுவதும் ஆகியவை ஆகும்.

error: Content is protected !!