“இந்திய மககளை இனி யாரும் ஏமாற்ற முடியாது! – ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி!

“இந்திய மககளை இனி யாரும் ஏமாற்ற முடியாது! – ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி என்னிடம் கேட்டால் இந்திய மககள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது என்று சொல்ல தோன்றுகிறது” என்று கருத்து சொல்லியிருக்கிறார் இசைப்புயல் என்று ரசிகர்களால் புகழப்படும், ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரஹ்மான்.
jan 6 - a r rahman
இன்று ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள்.1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி சென்னையில் பிறந்தார் இவர். இன்று ஏ.ஆர்.ரஹ்மானாக மக்களால் போற்றப்படும் இவரின் நிஜப் பெயர் திலிப் குமார் ஆகும். சிறு பிள்ளையாக இருக்கு போதே தன் அப்பாவுடன் சேர்ந்து இசை அமைக்கும் கருவிகளை கற்றுக் கொண்டார். இவரது அப்பா சேகர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து வந்தார்.

கணினி பொறிவியல் துறையில் படிக்க ஆர்வம் கொண்ட இவர் லண்டன் இசைக் கல்லூரியில் பயின்றார். பிறகு தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமக்கத் தொடங்கிய இவர் இயக்குனர் மணிரத்தினம் மூலம் ரோஜா படத்திற்கு இசையமைக்கு வாய்ப்பினை பெற்றார். அப்படத்தில் இவர் இசை அமைத்த அனைத்து பாடல்களும் மக்களின் மனதில் பெரும் வரவேற்பை பெற்றன.

தமிழ் சினிமாவின் இசை உலகை மாற்றி அமைத்தது இவரது இசை. தனது முதல் பாடலான ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை இசையமைத்தப் பிறகு முதல் முதலில் தனது அம்மாவிடம் போட்டுக் காட்டினார். தனது மகனின் இசையைக் கேட்டு கண்ணீர் வடித்தார் இவரது அம்மா. உன் பாடல்கள் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என கூறிய இவரது அம்மாவின் ஆசிர்வாதம் இன்று அவரை உலகெங்கும் அடையாளம் காட்டியுள்ளது.

மேலும் இவரது முதல் படமான ரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக ‘ரோஜா’வை அறிவித்தது. ‘மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.

இதையடுத்து பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.

இதற்கிடையில் இவர் பழைமையை மறக்காதவர் கூட. அதனால் தான் இவர் இசையமைக்க முதல் முதலாக பயன்படுத்திய கீபோர்ட்டை இன்னமும் பயன்படுத்தி வருகிறார். தான் வெற்றியின் உச்சிக்குப் போனாலும் தனக்கு தனது அம்மாவின் ஆசிர்வாதமும் மகிழ்ச்சியும் தான் முக்கியம் என கூறுவார். ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது “எனக்கொரு அன்னை இருக்கின்றாள்” என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்.

அப்பேர்பட்ட ரஹ்மாணிடம் இன்று சினிமா மற்றும் அரசியல் பற்றி டெக்கான் கிரானிக்கல் நிருபர் கேட்டபோது,” ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களுக்கென நோக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. வாழ்க்கையிலிருந்து நிறைய கற்கிறோம். மற்றவர்கள் மூலமாக பல அனுபவங்களை பெறுகிறோம். 48வது வயதில் அதையெல்லாம் நினைத்து பார்க்கிறேன். அதிலிருந்து நான் கற்கும் விஷயம், மற்றவர்கள் நம்மால் சந்தோஷம் அடைய வேண்டும் என்பதுதான்.

குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் என எல்லோரையுமே சந்தோஷப்படுத்த வேண்டும். அது மிக முக்கியம். உள்ளத்தில¤ருந்து ஒலிக்கும் நிஜ குரலை கேட்க வேண்டும். இத்தனை புகழ் பெற்றும் அடக்கமாக இருப்பது பற்றி கேட்கிறீர்கள்.நான் தேர்ந்தெடுத்துள்ள பாதை என்னை அப்படி இருக்க செய்கிறது. சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதற்கு நான் எனக்காக வகுத்துள்ள கொள்கைகளே காரணம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்திய மககள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது. ஜெய்ஹிந்த்.” என்று ரஹ்மான் தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!