இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு!

இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக் கல்வி + பணி வாய்ப்பு!

இந்திய கப்பற்படையில் இலவசமாக நான்கு வருட பி.டெக் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2cadet(B.Tech) Entry Scheme-ல் சேருவதற்கு ஆள்சேர்ப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் 2014 ஜூலை மாதம் பி.டெக் பயிற்சி ஆரம்பமாகும்.
vazhikaati - jan 4 army
ஆள் சேர்ப்பு திட்டத்தின் பெயர்: 10+2 Cadet (B.Tech) Entry Scheme

வயதுவரம்பு: 02.01.1995 – 01.07.1997க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2வில் இயற்பியல், வேதியில், கணிதம் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது +2 -வில் ஆங்கில பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: +2 வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு 2014 பிப்ரவரி மே மாதங்களின் இடைப்பட்ட காலங்களில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: கோயம்புத்தூர், பெங்களூர், போபால்

தேர்வுகள் இரண்டு கட்டங்களாக மொத்தம் 5 நாள்கள் நடைபெறும்.

பயிற்சி: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள கப்பற்படை அகாடமியில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் அல்லது மெக்கானிக் என்ஜினியரிங் பிரிவில் 4 வருட பி.டெக் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பி.டெக் பட்டம் வழங்கும்.

விண்ணப்பிக்கும் முறை http://www.nausena-bharti.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் Apply Online என்ற தலைப்பின் கீழ் உள்ள Officer Entry பகுதியை கிளிக் செய்து ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும். நிரப்புவதற்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்கு படித்தப்பிறகு விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ் நகல்கள் சாதாரண அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 15.01.2014

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2014

இது குறித்த மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nausena-bharti.nic.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

error: Content is protected !!