இந்திய எல்லைப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் ரிசார்ட் – 2பி விண்ணில் பாய்ந்தது!

இந்திய எல்லைப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் ரிசார்ட் – 2பி  விண்ணில் பாய்ந்தது!

இந்தியா ‘ரேடார் இமேஜிங் சேட்டிலைட்’ (ரிசாட்-2பிஆர்1) என்ற நவீன செயற்கைக் கோளை 2009-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இது இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்டது. இந்தச் செயற்கைக் கோள் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உட்பட பல்வேறு தகவல்களை பாதுகாப்புப் படையினருக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், அடுத்தகட்டமாக ‘ரிசாட் – 2’ ரக செயற்கைக் கோள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வேளாண்மை, வனச் சூழல், பேரிடர் மேலாண்மை ஆகிய பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தியது. இந்த ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது 615 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வின்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ரிசாட் 2-பி செயற்கைக் கோளானது விண்ணில் 557 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

‘ரிசாட் -2’ செயற்கைக் கோள் இந்திய எல்லைப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும். பூமியில் உள்ள எந்தக் கட்டிடத்தையும் மிகத் தெளிவாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். மேக மூட்டங்கள், பனி போன்ற எந்த சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக செயப்படும். குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட இந்திய எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம், அசைவுகளை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்பும்.

இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறும்போது, ”ரிசாட் -1 போலவே ரிசாட் -2 வெளிப்புற வடிவமைப்பும் இருக்கும். ஆனால், ரிசாட் -2 செயற்கைக் கோளில் அதிநவீன வசதிகள், ரேடார் மூலம் இரவு பகல் என கண்காணிக்கும் திறன், கூடுதல் திறன், கட்டிடங்களை நாள்தோறும் 2 அல்லது 3 முறை படம் எடுத்தும் அனுப்பும் வசதி உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன” என்றனர்.

இந்தச் செயற்கைக் கோளை பேரிடர் மேலாண்மைக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Related Posts

error: Content is protected !!