இந்திய எம்.பிக்கள் பாதிபேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு- சிங்கப்பூர் பிரதமர் வேதனை!

இந்திய எம்.பிக்கள் பாதிபேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு- சிங்கப்பூர் பிரதமர் வேதனை!

சிங்கப்பூர் நாட்டின் நாடாளுமன்ற கூட்டம் கடந்த செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங் கலந்து கொண்டு பேசினார். அப்போது லீ சியென் லூங்,” சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்கள் தைரியமும், சிறந்த திறன் கொண்டவர்களாக இருந்தனர். அப்படி டெவிட் பென் குரியன்ஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகிய இருவரும் போற்றத்தக்கத் தலைவர்களாகச் செயல்பட்டனர்.

நாடுகள் உயர்ந்த லட்சியம் மற்றும் உன்னத கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. ஆனால் இப்படி உருவாக்கப்பட்டதை அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் தக்கவைத்துக் கொள்வதில்லை. இதனால் இவர்கள் மீது மரியாதை குறைந்து வருகிறது. மேலும் நாடு வீழ்ச்சியடைகிறது.

ஜவஹர்லால் நேரு உருவாக்கிய இந்தியாவில் தற்போது உள்ள மக்களை உறுப்பினர்கள் பாதி பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே அடுத்து தலைமுறையினர் சிங்கப்பூர் நாட்டின் மரபுரிமையை பாதுகாக்க வேண்டும். இதற்குநாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்தே அந்நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங் இப்படிப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் பிரதமரின் இந்தப் பேச்சைப் தொடர்ந்து மோடியின் பா.ஜ.க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!