இந்தியாவில் 74 லட்சம் டூப்ளிகேட் லைசென்ஸ்! – மத்திய அமைச்சர் தகவல்!

இந்தியாவில் 74 லட்சம் டூப்ளிகேட் லைசென்ஸ்! – மத்திய அமைச்சர் தகவல்!

இந்தியாவில் மொத்தம் 74 லட்சம் போலி லைசென்ஸ்கள் இருப்பதாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாகனம் ஓட்டும் உரிமம் பெற்ற 6 கோடி பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 74 லட்சம் லைசென்ஸ்கள் போலியானவை என்பது அப்போதே ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
rajnikanth-drivers-license
ஒரே எண்ணில் பலருக்கு டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்ஐசி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் போலி ஓட்டுநர் உரிமம் எனப்படும் டூப்ளிகேட் லைசென்ஸ் வைத்திருப்போரின் எண்ணிக்கையானது (74 லட்சம்) ஹாங்காங் மக்கள் தொகைக்கு இணையானது என்ற அதிர்ச்சி தகவலும் அப்போதே வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது,“ தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள 25-30 சதவீத ஓட்டுனர் உரிமங்கள் போலியானது. எனவே, அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள போக்குவரத்து நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வருவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என கூறினார்.

இந்த புதிய சட்டம் மூலம் ஓட்டுனர் உரிமம் குறித்த அனைத்து தகவல்களும் கணினி மயமாக்கப்பட்டு அவை செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்படும், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவையும் செயற்கைக்கோளுடன் இணைக்கப்படும். இதனால் போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்

Related Posts

error: Content is protected !!