இந்தியாவில் ‘ரொம்ப நல்லவங்க’ உள்ள நகரம் திருச்சி! – தேசிய குற்ற பிரிவு ஆவண காப்பகம் தகவல்!

இந்தியாவில் ‘ரொம்ப நல்லவங்க’ உள்ள நகரம் திருச்சி! – தேசிய குற்ற பிரிவு ஆவண காப்பகம் தகவல்!

கடந்த 2013ம் ஆண்டில் இந்தியாவில் பதிவாகியுள்ள மொத்த கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 33,707 என்றும் இது கடந்த 2012ம் ஆண்டில் 24,923 ஆக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் டெல்லியில் கடந்த 2013ம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியாவின் தலை நகரமான புதுடெல்லி மீண்டும் கற்பழிப்பின் தலை நகரம் என்ற பெயரை தக்க வைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முந்தைய ஆண்டை ஓப்பிடுகையில் 26 சதவீத குற்ற செயல்கள் நடந்து உள்ளன என சமீபத்தில் தேசிய குற்ற பிரிவு ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
safe city trichy
தேசிய குற்ற பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ள தகவலில், “நாட்டின் பெரிய மாநிலமான மத்திய பிரதே சம் இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலிடம் பிடித்து உள்ளது. 30 வழக்கு களுடன் நாகலாந்து பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் அதிக பட்சமாக 5076 கற்பழிப்பு வழக்குகளும் அடுத்து ராஜஸ்தானில் 3759 வழக்குகளும், உத்தரபிரதேசத்தில் 3467 வழக்குகளும், மராட்டிய மாநிலத்தில் 3438 வழக்குகளும் பதிவாகி உள்ளது. அசாமில் 1980 வழக்குகள் பதிவாகி உள்ளது.

2013 ஆண்டு 33707 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருந்தது. அது இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு 37413 ஆக அதிகரித்து உள்ளது. முந்தைய ஆண்டை விட இது 11 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.இதில் 524 பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் ஆவார்கள் 6 பேர் வெளி நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2014 இல் கற்பழிப்புகள் எண்ணிக்கை கவலை அடைய செய்து உள்ளது.இந்தியாவில் 53 நகரங்களை தேசிய குற்ற பிரிவு ஆவண காப்பகம் பட்டியலிட்டு உள்ளது. இதில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. 2014 ஆண்டு கணக்குப்படி டெல்லியில் 1813 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது.மும்பையில் 607 கற்பழிப்பு வழக்குகளும்,பதிவாகி உள்ளது. 3 வழக்குகள் மட்டுமே பதிவாகி தமிழ்நாட்டில் உள்ள திருச்சி பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது.சென்னையில் 2013 ஆண்டு 83 வழக்குககள் பதிவாகி இருந்தது தற்போது 65 ஆக குறைந்து உள்ளது. ஆனால் ஒட்டு மொத்த மாநில அளவில் 2013 ஆம் ஆண்டு 923 கற்பழிப்பு வழக்கு பதிவாகி இருந்தது ஆனால் அது தற்போது 1110 ஆக உயர்ந்து உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!