இந்தியாவில் மோடி ஆட்சியில் ஊழல் குறைகிறது!- சர்வே தகவல்

இந்தியாவில் மோடி ஆட்சியில் ஊழல் குறைகிறது!- சர்வே தகவல்

இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. சரியாகச் சொல்லவேண்டுமானால் அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்கும் வகையில் 1941லேயே The Special Police Establishment என்ற ஓர் அமைப்பு கூட ஏற்படுத்தப்பட்டது.ஆனாலும் சட்டங்கள், அமைப்புக்கள் எதுவும் அரசியல் ஊழலையோ,அதிகாரிகளின் ஊழலையே கட்டுப்படுத்தவில்லை.மேலும் விடுதலை பெற்ற இந்தியாவின் 60 ஆண்டுக் காலத்தில் நாடாளுமன்றத்தையும், நாட்டையும் உலுக்கிய ஊழல் விவகாரங்கள் ஏராளம். உலக நாடுகளின் ஊழல் ஒழிப்பு குறித்த அட்டவணை வெளியாகி உள்ளது. அதில் இந்தியாவில் ஊழல் குறைந்து வருவது கொஞ்சம் ஆறுதலை ஏற்ப்படுத்தியுள்ளது.
India_Corruption_1
நடப்பு ஆண்டின் உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 178 நாடுகள் கொண்ட இந்தத் தரநிலைப் பட்டியலில், இந்தியா 2 இடங்கள் ஏற்றம் கண்டு 85-வது இடத்தை அடைந்துள்ளது.ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில், நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் இந்தத் தரவரிசைப் பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டு 87-வது இடத்தில் இருந்தது. அண்மைக்கால்த்தில் ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட உயர் அதிகாரிகள் பலர் ல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுள்ளதையடுத்தே, இந்தியாவின் ஊழல் மீதான பற்று சற்றே குறைந்துள்ளதாக சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 178 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா பெற்றுள்ள மதிப்பு 100-க்கு 36, பிடித்துள்ள இடம் 85. இலங்கை, தாய்லாந்து, பர்கினோ பாசோ ஆகிய நாடுகளும் இதே இடத்தில் இருக்கின்றன.டென்மார்க், ஊழலற்ற நாடாக முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2013-லும் டென்மார்க் நாடே முதலிடத்தில் இருந்தது. சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்த் நாடாக கடைசி இடத்தில் இருக்கின்றன. தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மற்ற நாடுகளைவிட முன்னேறிய நிலையிலேயே இருக்கிறது. இருப்பினும், பூட்டான் மற்றும் சற்று முன்னே உள்ளது.

இதனிடையே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊழல் தடுப்புக்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை. சீனாவில், பொருளாதார ஏற்ற நிலையில் இருந்தபோதுகூட அங்கு ஊழல் மலிந்தே இருந்தது என டிரான்பெரன்சி இன்டர்சேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!