இந்தியாவில் டுவெண்டி 20! – ஐ.சி.சி. தகவல்!

இந்தியாவில் டுவெண்டி 20! – ஐ.சி.சி. தகவல்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட 20 ஓவர் உலககோப்பை போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘டுவென்டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். கடைசியாக கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்தது. இதுவரை ஐந்து ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ளன.ஆறாவது ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர், வரும் 2016ல் இந்தியாவில் நடத்தப்படும் என ஐ.சி.சி., அறிவித்தது. இத்தொடர், வரும் 2016ல் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் முதன்முறையாக, ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது.
icc
ஐ.சி.சி., தொடர்களுக்கான அட்டவணை:

‘டுவென்டி-20′ உலக கோப்பை தகுதிச் சுற்று அயர்லாந்து/ஸ்காட்லாந்து 2015 ஜூலை 6-26உலக கோப்பை (19 வயது) வங்கதேசம் 2016 ஜன., 22 – பிப்., 14’டுவென்டி-20’ உலக கோப்பை இந்தியா 2016 மார்ச் 11 – ஏப்., 3சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்து 2017 ஜூன் 1 – 19பெண்கள் உலக கோப்பை இங்கிலாந்து 2017 ஆக., 4-27உலக கோப்பை (19 வயது) நியூசிலாந்து 2018 ஜன., 12 – பிப்., 4உலக கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசம் 2018 மார்ச் 1 – ஏப்., 4பெண்கள் ‘டுவென்டி-20’ உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் 2018 நவ., 2 – 25உலக கோப்பை இங்கிலாந்து 2019 மே 30 – ஜூலை 15

Related Posts

error: Content is protected !!